உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலம் கர்வால் மாவட்டத்தில் உள்ள பவுரியில் இருந்து ராம்பூருக்கு 40 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது.
அல்மொரா மாவட்டம் மர்சுலா பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து 200அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று (நவம்பர் 3) இரவு பயணத்தை தொடங்கிய பேருந்து, ராம்பூரை சென்றடைய 35 கிமீ இருந்த நிலையில் இன்று காலை 8.25 மணியளவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது.
சம்பவ இடத்தில் உத்தராகண்ட் போலீசார், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அல்மோரா மாவட்ட ஆட்சியர் அலோக் குமார் பாண்டே ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி வேகமாக நடந்து வருவதாகவும், பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
91 ஆண்டுகளில் கண்டிராத தோல்வி… கம்பீரை மாற்றி இவரை கொண்டு வாங்க!
