உத்தரப்பிரதேசத்தில் இருந்து பீகார் செல்லும் ஒரு லாரியின் என்ஜினுக்குள் ராட்சத மலைப்பாம்பு ஒன்று மறைந்துகொண்டு 98 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பயணத்தைத் தொடங்கிய லாரி ஒன்று பீகாரில் உள்ள நர்கதியாகஞ்ச் என்ற இடத்துக்கு சென்றது. அங்கே லாரி நிறுத்தப்பட்டு, ரேடியேட்டருக்குத் தண்ணீர் ஊற்றும்போது லாரியின் என்ஜின் பகுதியில் ராட்சத மலைப்பாம்பு சுருண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
இந்த மலைப்பாம்பு பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு லாரியின் என்ஜினில் இருந்து அதை மீட்டனர். பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பாம்பு தாக்கப்படவோ, காயமடையவோ இல்லை என்றும் கூறியுள்ளனர்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆப்பிள் இறக்குமதிக்குத் தடை நீக்கம்!
டாப் 10 நியூஸ்: விழுப்புரத்தில் முதல்வர் ஆய்வு முதல் கனமழை விடுமுறை வரை!