உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து!

Published On:

| By christopher

உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் இருந்து வரும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரின் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி.

அதிலும் இயற்கை அழகு எழில் கொஞ்சும் நீலகிரி மலையை ஊர்ந்து செல்லும் ரயிலேறி குளிருக்கு நடுவே இதமாய் சுற்றி பார்ப்பது என்பது சிறப்பான பொழுதுப்போக்காக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிவித்தபடி கோவை, நீலகிரியில் இன்று பெய்த கனமழையால் உதகை ரயில் செல்லும் பாதையில் பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் சேவை இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7:10 மணிக்கும், அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மதியம் 2 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா விலகல்!

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு… பிரதமர் மோடி ஆதரவுக்கரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share