முதல்வர் ஸ்டாலின் வன்னியர் சமுதாயத்துக்கு துரோகம் செய்துவிட்டார் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். using the Vanniyar community as vote banks
மாமல்லபுரம் திருவிடந்தை கிராமத்தில் வன்னியர் சங்க சித்திரை முழுநிலவு மாநாடு இன்று (மே 11) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநாட்டுக்கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றினார். தொடர்ந்து பு.தா.அருள் மொழி, ஜி.கே.மணி ஆகியோர் உரையாற்றினர்.
அவர்களை தொடர்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம். இது சமுதாய சந்திப்பு அல்ல, இது குடும்ப சந்திப்பு. வரலாற்றில் இப்படி ஒரு மாநாடு யாரும் நடத்தியது கிடையாது.
ஆனால், காடுவெட்டி குரு இன்று இல்லை என எனக்கு வருத்தமாக இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு மிக பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்தினார்” என்று கூறினார்.
மேலும் அவர், “அருந்ததியினருக்கு 3 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்கு 3 விழுக்காடு, எம்.பிசிக்கு 20 விழுக்காடு, வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு, மருத்துவ துறையில் பட்டியலின பழங்குடியினருக்கு 22.5 விழுக்காடு, ஓபிசிக்கு 27 விழுக்காடு இதையெல்லாம் வாங்கிக் கொடுக்க பாடுபட்டவர் நமது ஐயா. ஆனால் அந்தளவுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை. ஏனென்றால் அவர் இந்த சமுதாயத்தில் பிறந்துவிட்டார்.
இந்த சமுதாயத்தை எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? ஆண்ட, ஆண்டுகொண்டிருக்கிற கட்சிகள் எல்லாம் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டுமே இந்த சமுதாயத்தை பயன்படுத்துகின்றனர்.
தேர்தல் வந்தால் உங்களை பயன்படுத்துகிறார்கள். தேர்தல் முடிந்தால் அவ்வளவுதான்… அதுபோல மற்ற சமூகத்தினரும் உங்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா… எங்கேயாவது பிரச்சினை என்றால் மட்டும் ஓடி வருவார்கள்… நாமும் போவோம்… 30, 40 கேசு வாங்குவோம் . அதற்கு பிறகு அவ்வளவுதான். தேர்தல் வந்தால் டாடா பை, பை காட்டிவிடுவார்கள்.
எனவே படிப்பு, சுயமரியாதை என நமது உரிமைக்காக கூடியிருக்கிறோம். எம்.பி.சிக்கு இட ஒதுக்கீடு வந்து 36 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் நமக்கு சரியான முறையில் வேலைவாய்ப்பு, கல்வி கிடைக்கவில்லை.
அதனால் தான் ஐயா ராமதாஸ் போராடி வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வாங்கித் தந்தார்கள். ஆனால் சூழ்ச்சியாளர்கள் அதை நிறுத்திவிட்டார்கள். உச்ச நீதிமன்றம் சென்றோம். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் கிடையாது என்று தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு வந்து 1136 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் தமிழக முதல்வருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க மனமில்லை.
இதுதொடர்பாக பலமுறை முதல்வரை சந்தித்தோம். ஆரம்பத்தில் எங்களை நன்றாக வரவேற்று எங்களுக்கு நம்பிக்கை கொடுத்தார். ஐயாவிடமும், கவலைப்படாதீங்க நிச்சயமாக தருகிறேன் என்றார். இந்த இட ஒதுக்கீட்டுக்காக தனியாக சட்டமன்றத்தை கூட்டுகிறேன் என்று எனக்கு உறுதி கொடுத்தார்.
ஆனால் திடீரென முதல்வர் மனதை மாற்றிக்கொண்டார். கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். அந்த கணக்கெடுப்பை மத்திய அரசுதான் கொடுக்க வேண்டும் என்று ஒரு பொய்யான செய்தியை சொல்லிக்கொண்டிருக்கிறார்.
எவ்வளவு பெரிய துரோகத்தை இந்த சமூதாயத்துக்கு செய்கிறார்” என்று கூறினார். using the Vanniyar community as vote banks