ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகம் தொடர்ந்தால் கூடுதல் வரிகளை விதிப்போம் என அமெரிக்கா அதிபர் டொனால் டிடிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி மிகவும் நல்ல மனிதர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும். என்னை மகிழ்விப்பது மிகவும் முக்கியமானது.
ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்யட்டும்.. எங்களாலும் உடனடியாக வரிகளை உயர்த்திவிட முடியும். இவ்வாறு டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அதிகமான வரி விதித்த டிரம்ப், ரஷ்யாவுடனான இந்தியாவின் வர்த்தகத்தால் கூடுதல் வரிகளையும் விதித்து நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தார். தற்போது இந்தியாவுக்கு டிரம்ப் மீண்டும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
