அரசியல் கதையில் விஜயகுமார்?

Published On:

| By Manjula

uriyadi vijaykumar movie title

‘உறியடி’, ‘உறியடி 2’, ‘பைட் கிளப்’ படங்களின் நாயகன் விஜயகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படத்திற்கு, ‘எலெக்ஷன்’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

‘சேத்துமான்’ புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் விஜயகுமாருடன் இணைந்து முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இப்படத்தினை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

uriyadi vijaykumar movie title

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு நாளை (பிப்ரவரி 22) மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தலைப்பிற்கு ஏற்றது போல, முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

uriyadi vijaykumar movie title

குறுகிய காலத்திலேயே விஜயகுமார் நடிப்பிற்கு என, இளம் ரசிகர்கள் ஏராளமான பேர் இருக்கின்றனர். என்றாலும் துணிச்சலாக ஆரம்ப கட்டத்திலேயே அரசியல் கதையில் விஜயகுமார் நடித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ‘எலெக்ஷன்’ என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு!

இயக்குநர் ஜேசன் சஞ்சயின் ‘ஹீரோ’ இவர்தான்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share