3 மணி நிலவரம் – தொடரும் மந்தமான வாக்குப்பதிவு!

Published On:

| By admin

உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப்ரவரி 19) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்குப்பதிவு மந்தமான நிலையில் உள்ளது.

7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி வாக்குப்பதிவு முடியும் 2 மணி நேரத்திற்கு முன்பு வரை மந்தமான நிலையிலேயே உள்ளது. 8 மணி நேர வாக்குப்பதிவில் 47.18 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.

தேர்தல் ஆணைய தகவல் படி, சென்னையில் 31.89 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நாமக்கல்லில் 64. 19% வாக்குகள் பதிவாகியுள்ளன.

3 மணி வரை பேரூராட்சிகளில் 61.38%, நகராட்சிகளில் 53.49%, மாநகராட்சிகளில் 39.13% வாக்குகள் என மொத்தம் சராசரியாக 47.18 % வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 5 மணியுடன் பொதுமக்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்களிக்க வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

**3 மணி நிலவரம்**

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share