2024ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று (ஏப்ரல் 22) வெளியானது. இதில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த தேர்வில் தமிழகத்திலிருந்து 50க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பலர் இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தனர். UPSC exam The secret
இதில் தமிழ்நாட்டின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருக்கும் மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80ஆவது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றார். 2022ஆம் ஆண்டு முதன்முறையாகத் தேர்வு எழுதிய அரவிந்த் 361ஆவது ரேங்க் பெற்றார். அப்போது குடிமைப் பணியை அவர் தேர்வு செய்யவில்லை.
மருத்துவ மேற்படிப்பை (எம்.டி) தொடர்ந்த அரவிந்த் தற்போது அதற்கான இறுதித் தேர்வை எழுதவுள்ளார். இதற்கிடையே 2024ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வு எழுதிய அரவிந்த் ராதாகிருஷ்ணன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பல்வேறு ஊடகங்களிடம் கூறுகையில், “அப்பாவின் வேலையெல்லாம் பார்க்கும் போது நானும் சிவில் சர்வீஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் வந்தது. நான் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் போது அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டிருக்கிறேன். எனவே அதையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது. எனவே போஸ்ட் கோவிடுக்கு பிறகுதான் இந்த தேர்வு எழுத முடிவு செய்தேன் . இப்போது 80ஆவது ரேங்க் கிடைத்திருக்கிறது.
நான் மெடிக்கல் சயின்ஸ் துறையைத் தேர்வு செய்து படித்ததால் யுபிஎஸ்சி தேர்வும் எனக்கு எளிதாக இருந்தது. இந்த தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்றுவிட முடியாது. தேர்வு அறிவிப்பு முதல் முடிவுகள் அறிவிப்பது வரை ஒரு வருட காலம் ஆகும். அப்பா எனக்கு மன ரீதியாக ஆதரவாக இருந்தார். நேர்காணலுக்காக என்னிடம் நிறைய கேள்விகளைக் கேட்டிருக்கிறார்.
அதேநேரம் நாளொன்றுக்கு 4, 5 மணி நேரம் படிக்கிறோம் என்பதை தாண்டி ஒரு மணி நேரம் படித்தாலும் முழு ஈடுபாட்டோடு உருப்படியாகப் படிக்க வேண்டும்” என்றார்.
மேலும், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தால் பலர் பயனடைந்து வருவதாகவும் அரவிந்த் ராதாகிருஷ்ணன் கூறினார். UPSC exam The secret
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி : ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் மகன் சொன்ன சீக்ரெட்!
Published On:
| By Kavi
இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
