யுபிஎஸ்சி தேர்வில் கடந்த ஐந்தாண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இருந்து அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். UPSC Exam 2025 Toppers List
2024 ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 57 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு 45 மாணவர்கள் தேர்வான நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக 12 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 100-ரேங்கிற்கு உள்ளாக ஆறு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தர்மபுரியை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற மாணவர் 23 வது ரேங்க் பெற்று தமிழகத்தில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த கீ கீ (Gee Gee) என்ற மாணவி அகில இந்திய அளவில் 25 வது இடத்தை பிடித்துள்ளார். அவர் வெளியுறவு பணியில் சேர திட்டமிட்டுள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து அவர் கூறுகையில், “எனது சகோதரர் ஒரு சமூக சேவகர். அதனால் சமூக சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் வந்தது. நான் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்புகிறேன். முதல் முயற்சியிலேயே 107வது ரேங்க் பெற்றேன். தற்போது 25ஆவது ரேங்கிற்கு முன்னேறி உள்ளேன் என்று கூறியுள்ளார். UPSC Exam 2025 Toppers List
தமிழ்நாட்டைச் சேர்ந்த பவித்ரா என்ற மாணவி 42வது ரேங்க் பெற்றுள்ளார். இவரது தாய் தந்த இருவரும் அரசு ஊழியர்கள். தகவல் தொழில்நுட்ப துறையில் பி டெக் படித்த பவித்ரா, மூன்றாவது முறையாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுவையில், நான் முதல் முறை தேர்வு எழுதிய போது பிரிலிம்ஸ் தேர்வில் கூட தேர்ச்சி பெறவில்லை.
இரண்டாவது முறை தேர்வு எழுதிய போது நேர்காணல் வரை சென்றேன். மூன்றாவது முறையாக யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன் என்று கூறினார்.
தற்போது இவர் தமிழ்நாடு மாநில மேம்பாட்டு கழகத்தில் (சிப்காட்) உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். மொத்தம் 140 மாணவர்கள் தமிழ்நாட்டில் இருந்து நேர்காணலுக்காக தேர்வான நிலையில் இறுதியாக 57 மாணவர்கள் குடிமை பணிக்கு தேர்வாகியுள்ளனர். UPSC Exam 2025 Toppers List
