2024ஆம் ஆண்டு நடந்த சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளை இன்று (ஏப்ரல் 22) யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. upsc 2024 toppers list
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு 180 ஐஏஎஸ், 55 ஐஎப்எஸ், 147ஐபிஎஸ், 605 மத்திய சேவை குரூப் ஏ பிரிவு, 142 குரூப் பி பிரிவு பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, முதன்மைத் தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு இரண்டு அமர்வுகளாக கடந்த ஜனவரி மாதம் நேர்காணல் நடத்தப்பட்டது.
இந்தநிலையில் யுபிஎஸ்சி இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இறுதியாக 1009 தேர்வர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 335 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள். 109 பேர் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள், 318 பேர் ஓபிசிபிரிவினர் , 160 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், 87 பேர் பழங்குடியினர் ஆவர்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே (0240782) என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
சிவச்சந்திரன் (1214507) என்ற மாணவர் தமிழகத்தில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23 ஆம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா தேசிய அளவில் 39வது இடம் பிடித்துள்ளார்.
தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்கள் காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெற்ற 50 பேரில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தில் முழு நேர பயிற்சி பெற்றவர்கள் என்று தகவல்கள் வருகின்றன.
யுபிஎஸ்சி டாப்பர்ஸ் லிஸ்ட்டை இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளல்லாம். upsc 2024 toppers list
