நாடு முழுவதும் ஜிபே, போன் பே மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்ய முடியவில்லை எனப் பயனர்களிடமிருந்து புகார்கள் குவிந்து வருகின்றன. upi down… npci reply on phonepe gpay paytm service
யுபிஐ என்பது டிஜிட்டல் முறையிலான உடனடி பணப்பரிமாற்ற சேவையாகும். பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவால் (NPCI) 2016-ல் வடிவமைத்து தொடங்கப்பட்டது.
அதன்படி, ஜிபே, போன் பே மற்றும் பேடிஎம் செயலிகள் மூலம் விரைவான மற்றும் எளிதான பணப் பரிமாற்றங்கள் நாடு முழுவதும் மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக யுபிஐ சேவையை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக NPCI தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதில், “NPCI அவ்வப்போது தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்கிறது. இதனால் UPI பரிவர்த்தனை நிராகரிப்பு செய்யப்படுகின்றன. இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் உங்களுக்கு இது குறித்து தொடர்ந்து அப்டேட் செய்யப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் 26ஆம் தேதி தான் யுபிஐ சேவையைப் பயன்படுத்த முடியாதபடி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த 20 நாட்களுக்கும் மீண்டும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.