PhonePe, Paytm, Google pay உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் செயலிழந்ததால் இந்தியா முழுவதும் உள்ள வியாபாரிகள், மாணவர்கள் உள்ளிட்ட பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். UPI down across india
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) துணை நிறுவனமான NPCI BHIM சேவைகள் லிமிடெட் (NBSL) நேற்று பாரத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM 3.0.) செயலியின் சமீபத்திய பதிப்பை அறிமுகப்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் இந்த செயலி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மூன்றாவது பெரிய அப்டேட் ஆகும். இது 15 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் உள்ள பயனர்கள் மொழித் தடையின்றி யுபிஐ சேவை மூலம் ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்யப்படும்.
இந்த நிலையில் தான் இன்று மாலை 7 மணி முதல் இந்தியா முழுவதும் PhonePe, Paytm மற்றும் Google Pay உள்ளிட்ட யுபிஐ ஆப்கள் முடங்கியது. இது பயனர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.