இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க ஒரு தம்பி சோகமா உட்கார்ந்திருந்தான்.
என்னானு கேட்டதுக்கு லவ் பெயிலியர்னு சொன்னான்.
என்னாச்சுனு கேட்டேன். அதுக்கு அவன், “அவ ப்ரெண்ட் ஒருத்தி, ’போயும் போயும் இவனையா லவ் பண்ற? மேரேஜ் பண்ணிட்டு டைவர்ஸ் பண்ணா 4000 ரூபா தான் ஜீவனாம்சம் கொடுப்பான்.. பரவாயில்லையா?’னு சொல்லிருக்கா… அவ்ளோ தான் என்ன கழட்டி விட்டுட்டா’னு சொல்லி ஃபீல் பண்ணான்.
இதுக்கெல்லாமா கழட்டி விடுவாங்கனு ஷாக் ஆயிடுச்சி… தம்பிக்கு ஒரு டீ வாங்கி கொடுத்து ஆறுதல் படுத்திட்டு கெளம்பிட்டேன். update kumau memes and trolls may 28
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumau memes and trolls may 28

தர்மஅடி தர்மலிங்கம்
ED சோதனைக்கு ஸ்டாலின் அஞ்சமாட்டார் – வைகோ
ஆமாமா…. நீங்க மறுபடியும் எம்.பி சீட் கேட்டா தான் அஞ்சுவார்.

கோவிந்தராஜ்
கோயங்கா டூ ரிஷப் பண்ட்!
அப்ப உனக்கு ரன் அடிக்க தெரியும், கடைசி மேட்ச்ல அடிச்சிப்போம்னு இருந்துருக்க

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
தனியாக கிடைக்கும் நூறு வேர்க்கடலைகளை விட மிக்சர்-க்கு நடுவே தேடி கிடைக்கும் ஒரு கடலை-க்கு கூடுதல் சுவை.
அதனால..?
அதனால எல்லாம் ஒன்னுமில்லை, தத்துவம் சொன்னா அனுபவிக்கனும் ஆராய கூடாது..

லக்ஷ்மனன்
24 மணி நேரமா நோ சுகர் டயட்ல இருக்கேன் 48 மணி நேரமா இருக்கேன்னு பெருமை பீத்த களைங்களா, அதை விட நல்லது ஒன்னு நான் சொல்றேன் கேட்பீங்களா..?
நோ ட்விட்டர், நோ இன்ஸ்டா, நோ சோசியல் மீடியான்னு இருந்து பாருங்க, உங்க மென்டல் & பிசிகல் ஹெல்த் ரெண்டும் எங்கயோ போயிரும்டா அப்ரசன்டுகளா..

▶படிக்காதவன்™✍
எப்போ, ‘கொஞ்சம் சீட் மாறி உட்காருங்கனு சொல்ற நிலை மாறுதோ,
அப்பத்தான் போக்குவரத்து லாபத்தில் இயங்கும்னு சொல்லி கடந்தார் அந்த போராளி…

Sabarish_twittz·
சொந்த ஊர்லயும் சரி
வெளியூர் போனாலும் சரி
நாம பஸ்க்கு நிக்கும்போதுதான்
வரவேண்டிய பஸ்சும் வராம போகும்
ஏன்னா நம்ம டிசைன் அப்படி…

✒️Writer SJB✒️
ஒரு அரபி ஷேக் அரிய வகை ரத்தம் ஏற்றுவதற்காக இந்தியாவுக்கு வந்தார்
ஒரு குஜராத்திக்காரர் அவருக்கு ரத்தம் கொடுத்தார்
மகிழ்ந்து போன ஷேக் குஜராத்திக்காரருக்கு ஒரு புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி கொடுத்தார்
அடுத்த வருடம் மீண்டும் ரத்தம் ஏற்ற வந்தார்
அதே குஜராத்திக்காரர் அவருக்கு ரத்தம் கொடுத்தார்
இந்த முறை சில பேரிச்சம் பழங்கள் மட்டும் கொடுத்தார்
இதுதான் பரிசா என்று நான் குஜராத்தி காரன் கேட்டதும்
‘அது என்னமோ தெரியல உங்க ரத்தம் எத்துன பின்னாடி எனக்கு யாருக்கும் பரிசு பணம் கொடுக்க மனசு வரல’ என்றார்.

தர்மஅடி தர்மலிங்கம்
மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளரும் – பிரதமர் மோடி
அதான்… மாநிலங்களை வளர விடமாட்டேங்குறீங்களா ஜி…
லாக் ஆஃப்