வேட்டி மட்டுமா இல்லன்னா…: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

அரசியல்னா அடுத்தவன் வேட்டிய உருவுறதுனு தெரியும். ஆனா இந்த அளவுக்கு நடக்கும்னு எதிர்பார்க்கல.

ஓபிஎஸ் அதிமுக கரை போட்ட வேட்டி கட்டினா… நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவோம்னு சொல்லியிருக்காரு ஜெயக்குமார். பாவம் நம்மூர் நீதிமன்றங்கள் எதையெல்லாம் விசாரிக்க வேண்டியிருக்கு பாத்தீங்களா? ஜெயக்குமார் சார்… பன்னீர் கட்டுற வேட்டியோட விட்ருங்க‌… ரொம்ப உத்து கவனிச்சிட வேணாம்…

நீங்க அப்டேட் பாருங்க

கோழியின் கிறுக்கல்!!

வண்டியில் அப்பாவின் பின் பட்டாசு டப்பாவுடன் அமர்ந்து செல்லும் குழந்தையின் கண்களில், அந்த பட்டாசுகள் தரும் ஒளியை விட அதிக மகிழ்ச்சி ஒளி!!
ஜோ…
இடிப்போம்னு எங்க சொன்னேன், வேற இடத்தில வைப்போம்னுதானே சொன்னேன் ~ நவீன சவார்க்கார் அண்ணாமலை.
கோழியின் கிறுக்கல்!!
போன தடவை தீபாவளிக்கு வந்தப்ப இதே மாதிரி முறுக்கு தான் கொடுத்தீங்க!!
அதே மாதிரி இல்லைங்க, அதே முறுக்கு தான்!!
ச ப் பா ணி
மிச்சம் வைக்க கூடாதது பகையையும் “பழைய இட்லி மாவையும்”
mohanram.ko
எல்லோரும் நாளைக்கு தானே ஊருக்கு கிளம்புவாங்க, கூட்டம் இருக்காதுனு இன்னைக்கே ஊருக்கு கிளம்பி, பஸ் ஸ்டாப்க்கு போனா… எல்லோரும் என்னைய மாதிரியே யோசிச்சி இருக்காங்க
ச ப் பா ணி
ஒவ்வொரு சீரியல் பார்க்கும் தாய்க்கு பின்னும் ஒரு சிங் சாங் பார்க்கும் குழந்தை இருக்கும்
சரவணன். ????
முன்னாள் ஆளுமை இருந்திருந்தால் செல்லூர் ராஜூ இப்படி அமைச்சரை பாராட்டியிருப்பாரா? – அண்ணாமலை!
மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியை டம்மி பீஸ் ன்னு சொல்றீங்களே.. கில்லின்ணே நீங்க..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெரியார் சிலையை வேறு இடத்தில் வைப்பதே பாஜகவின் தேர்தல் வாக்குறுதி – அண்ணாமலை
# ஆனா வாக்குறுதில கூட நாட்டு முன்னேற்றத்தை பத்தி தப்பி தவறி எதுவும் சொல்லிறாத இவங்க நேர்மை எனக்கு புடிச்சுருக்கு..
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share