பொங்கலுக்கு என் கூட ஊருக்கு வர்ற நண்பனுக்கு கால் பண்ணி, “டேய்…போன தடவ மாதிரி சொதப்பிராம, ஒழுங்கா நேரத்துக்கு வந்து சேரு…கூட்டத்துல பஸ் நமக்காகல்லாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்க மாட்டாங்கன்னு” சொன்னேன்.
அவன், “நண்பா…அதெல்லாம் ஒன்னும் நடக்காது… பஸ் 9 மணிக்கு தானே…கரெக்ட்டா 8 மணிக்கெல்லாம் ஷார்ப்பா வந்துருவேன்னு” சொன்னான்.
“வந்தான் சரிதான்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.
சரியா 7 மணிக்கு அவன்கிட்ட இருந்து கால் வந்துச்சு. இவ்வளவு பெர்ஃபக்ட்டா இவன் இருக்க மாட்டானேன்னு போன எடுத்தேன், “நண்பா…நான் தான் சொன்னேன்லே பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேண்டான்னு” சொன்னான்.
“அதுக்குள்ள வந்துட்டியா…நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துக்கிட்டு இருக்கேன்…இன்னும் 15 மினிட்ஸ்ல ரீச் ஆகிருவேன்னு” அவன் கிட்ட சொன்னேன்.
அடுத்த 10 நிமிஷத்துல திரும்பவும் கால் பண்ணான், “நண்பா…தூத்துக்குடிக்கு கோயம்பேடுல இருந்து பஸ் இல்லயாமே…”
“அடப்பாவி…உன்ன எவண்டா கோயம்பேடுக்கு போக சொன்னான்…அதான் டிக்கெட்லயே கொட்ட எழுத்துல கிளாம்பாக்கம்ன்னு போட்ருக்காங்கல்லன்னு” அவன திட்டுனேன்.
“நண்பா…பழக்கதோஷத்துல வந்துட்டேன்…சாரின்னு” சொன்னான்…
”ஒன்னும் பிரச்சனை இல்ல நண்பா, நாளைக்கு ஆர அமர கிளம்பி கிளம்பாக்குத்துல இருந்து பஸ் ஏறி ஊர் வந்து சேருன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
நம்ம ஊர் கணக்குப்படி ரேசன் கடையில் சர்க்கரை கார்டு வைத்திருப்போர்கள் தான் அம்பானிகள்




ச ப் பா ணி
சர்க்கரை கார்டு வச்சிருந்தாலே சர்க்கரை கவுண்டர் மாதிரி முறைக்கிறாங்க.
அரிசி கார்ட் இருந்தா தா சின்னக்கவுண்டர் மாதிரி பார்க்குறாங்க
ரேசன் கடை அப்டேட்


