நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்…
மாஸ்டர் கடாயில மெது வடை ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாரு…
ஆல்ரெடி நம்ம மக்கள் ஒரு க்யூல வடை வாங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க…
கூட்டத்தோட கூட்டமா நானும் போயி ரெண்டு பேப்பர எடுத்து வடைக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்…
அப்போம் நண்பர், ”மோடி சுட்ட வடையை விட இந்த வடைக்கு பெரிய டிமாண்ட் இருக்கு… கூட்டம் சும்மா அள்ளுதுன்னு” சொன்னாப்ல…
அதுக்கு கடைக்காரண்ணே சிரிச்சிக்கிட்டே, ”தம்பி… எக்ஸ்ட்ரா உனக்கு ஒரு வடை தரேண்ணு” சொன்னாப்ல…
மொத்தம் மூணு வடைய ஆளுக்கு பாதியா சாப்டுட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.
Kirachand
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
அக்னி நட்சத்திரம் படத்தை எடுத்த மணிரத்னம்…
கத்தரி வெயில் படம் எப்ப எடுப்பார்னு கேட்கிறாம்பா…

நெல்லை அண்ணாச்சி
இளையராஜா ” அஞ்ஞானி “
….வைரமுத்து
” நன்றி ” இல்லாதவர்
வைரமுத்து…கங்கைஅமரன்
# அப்படி ஓரமா போய்
விளையாடுங்க…ரசிகர்கள்

ℳsd இதயவன்
காங்கிரசுக்கு போடும் ஓட்டு மோடி வெற்றிக்கு உதவி விடும் – மம்தா பானர்ஜி!!
காங்கிரஸ் பாஜகவின் பி டீம் னு சொல்லுங்க இன்னும் நகைச்சுவையா இருக்கும்?!

mohanram.ko
எங்களையெல்லாம் பார்க்கையில் பாவமா இல்லையா
இருந்துச்சு
எப்போ
2 டோஸ் ஊசி போட்டுகிட்டு, மறுபடியும் பூஸ்டர் டோஸ் போட்டுக்க வந்தபோது..

வசந்த்
ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்களை காப்பாற்றவும் – அன்புமணி
சரத்குமார் ~ முடியாது

ℳsd இதயவன்
மதிமுகவையும் திமுகவையும் பிரிக்க சதி வேலை நடக்கிறது – துரை வைகோ
யாரு சதி பண்ணுறது?
வேற யாரு உயிரே போனாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டேன் னு சொன்ன நான் தான் ?!

கடைநிலை ஊழியன்
to employer –
ஸ்கூல் பசங்களுக்கு சம்மர் ஹாலிடே விடுற மாதிரி, எங்களுக்கும் லவ் விடனும்.. வெயில் எங்கள மட்டும் ஒன்னும் பண்ணதா..

mohanram.ko
தப்பு பண்ணா
தண்டனையை அனுபவிக்கறவன்
மனுஷன்…
தப்பிச்சு
வெளிநாடு போறவன்
பெரிய மனுஷன்..

கோழியின் கிறுக்கல்!!
பசி நேரத்தில் இறுக மூடியிருக்கும் டிபன் பாக்ஸை திறக்கும் போது,
நமக்குள் இருக்கும் ஆதி மனிதன் சிறிது எட்டிப் பார்க்கிறான்!!
லாக் ஆப்