கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஜூஸ் கடைக்கு போயிருந்தேன்…

அடிக்குற வெயில்ல ஆளுக்கொரு வாட்டர் மெலன் ஜூஸ் ஆர்டர் பண்ணோம்…

அப்போம் அவரு, “கோவை ஆர்ப்பாட்டம் பாத்தீங்களான்னு” கேட்டாரு…

“இல்லை நண்பான்னு” சொன்னேன்…

“அட என்ன நண்பா…கோவையில நம்ம அண்ணாமலை 1 லட்சம் வாக்காளர் மிஸ்ஸிங்னு சொன்னாருல்ல… அதுக்கு ஆதரவா என் வாக்கு எங்கேன்னு பதாகையோட நம்ம மக்கள் போய் இன்னைக்கு போராட்டம் பண்ணிருக்காங்க… அதுல என்ன ஹைலேட்னா எல்லோரும் ஒட்டு போட்ருக்காங்கன்னு” சொன்னாப்ல…

“அடப்பாவியா… கடைசில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டாங்களேன்னு” கலாய்ச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
என் எக்ஸ் இன்னமும் என் இதயத்தில் தான் இருக்கிறாள்.. அவளுக்கும் சேர்த்து எனக்கு இரண்டு வாக்கு ஏன் இல்லை..?
கோழியின் கிறுக்கல்!!
நாங்க Accountல Minimum Balance வைக்கலைனா எங்களுக்கு Fine போடுற மாதிரி, ATMல பணம் இல்லைனா Bankக்கு Fine போட சட்டம் போடணும்!!
ச ப் பா ணி
சர்ப்ரைஸ்க்கும் ஷாக் க்கும் நூலலளவு தான் வித்தியாசம் மனைவி திடீர்னு ஊருக்கு போறேனு சொன்னா சர்ப்ரைஸ் போய்ட்டுக்கு ஈவ்னிங் வந்திடுவேனு சொன்னால் ஷாக்
கோழியின் கிறுக்கல்!!
சில தனியார் பேருந்துகள் ஹாரனை பிளிறிக் கொண்டே பின்னால் வரும் போது, எமனே துரத்திட்டு வர மாதிரி இருக்கு!!
Sasikumar J
புருஷனை பொண்டாட்டி கேள்வி கேட்காதவரை அவர் பொய் சொல்வதில்லை..!
ச ப் பா ணி
vijaychakkaravarthy
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share