வந்தியத் தேவன் எம்.ஜி.ஆரு: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

update kumaru tamil memes

நம்ம ஃப்ரண்டு இரும்புக் குதிரை மேல ஏறி வந்தியத் தேவன் போல வந்து சேர்ந்தாப்ல.  4 மணிக்கு வர்றதா சொன்னவன் வர்றப்ப மணி 6.  ‘ஏன்யா இவ்ளோ லேட்டுனு கேட்டேன்.   டிராபிக் போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டேன் மாப்ள, எம்.ஜிஆர்.தான் காப்பாத்துனாருனு சொன்னாப்ல. என்னய்யா நீயும் வடை சுட ஆரம்பிச்சிட்டியானு கேட்டேன்.’இல்ல மாப்ள, என்னை புடிச்ச டிராபிக் போலீஸ் எம்.ஜி.ஆர். ரசிகர் போல. என் வண்டிக்கு ஒரு பேப்பரும் இல்லை. எம்.ஜி.ஆர்.பத்தி டாக்குமென்ட்ரி படம் எடுத்துக்கிட்டிருக்கேனு சொன்னதும் எம்ஜிஆர் பத்தி பல கேள்வி கேட்டாரு. நானும் கரெக்டா பதில் சொன்னதும், சரி  கிளம்புங்கனு விட்டுட்டாரு. அப்புறம் அவர்கிட்டையே  ஆயிரம் ரூபாய் தேத்திட்டேன்ல’னு சிரிச்சாப்ல.

’என்னய்யானு கேட்டேன்… மதுரை மாநாட்டுக்கு போக காசில்லை சார்னு சொன்னேன். ஆயிரம் ரூபா கொடுத்து அனுப்பி வச்சாருனு சொல்லிட்டு இரும்புக் குதிரைய எடுத்துக்கிட்டு கண்ணாடிக் குதிரை வாங்க போயிட்டான். வந்தியத் தேவன் வாந்திய தேவனா வர்றதுக்குள்ள நான் ஜூட் விட்டுக்குறேன். நீங்க அப்டேட் பாருங்க.

Siva Subiramanian

“இந்தியாவை காப்பாற்றப்போவது I.N.D.I.A. கூட்டணிதான்”- ஸ்டாலின்

மொதல்ல உங்க கட்சியை ED கிட்ட இருந்து காப்பாற்றிக்குங்க.

Tea_Time_MC

Me to Depression, Overthink, Stress, Problems ~

பாசக்கார பயலுக 5 நிமிசம் நம்மல தனியா விட்டுட்டு இருக்க மாட்டானுக..????

balebalu

ஜப்பான் நிறுவனத்தின் கடன் வந்து 2 வருஷம் ஆச்சே

இந்நேரம் கட்ட ஆரம்பிச்சு இருக்கலாமே

ஒத்த செங்கல் வெச்சு எவ்வளவு மீம் போடுறாங்க பார்ப்போம் ன்னு வெயிட் பண்ணிகிட்டு இருந்தோம் பாஸ்

#MaduraiAIIMS


Mr.Ego

முடி கொட்டுதேன்னு கவலை படறது நெகடிவ் திங்கிங்.

கொட்ற அளவு தலையில இன்னும் முடி இருக்கேன்னு பாசிடிவா திங்க் பண்ண கத்துக்குங்க.


H.Umar Farook

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி: டெண்டர் கோரியது மத்திய அரசு!

# மீதமுள்ள 5 சதவீத பணிகளுக்கா ?!

update kumaru tamil memes
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

வலி என்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது ????

கழுத்து சுளுக்குனால அண்ணாந்து மேல பார்த்து காபி/டீ cupஐ கவுத்து கடைசி சிப்பை குடிக்க முடியாத வலியை அனுபவிச்சுருக்கியா நீ..?

update kumaru tamil memes
Vidhya

பஸ்ல என் தோள்ல

சாஞ்சு தூங்கின அம்மாவ எழுப்பி…

“இந்த டிரைவர்,ஏற்கனவே மூணு ஆக்ஸிடென்ட் பண்ணவராமே

உண்மையா’ன்னு கேட்டேன்…

இப்போ, கண் இமைக்காமல்

ரோட்டையே பார்த்துட்டு வருது…..

Dr. தீபக்

நீங்க சுட்ட வடைகளும்..

நீட் தேர்வு

எட்டு வழி சாலை

பரந்தூர் விமான நிலையம்

கல்விக்கடன் ரத்து

மற்றும் பல..

மோடி = ஸ்டாலின் ????

update kumaru tamil memes
வசந்த்

தமிழ்நாட்டை திமுகதான் நிரந்தரமாக ஆள வேண்டும் என கலைஞர் கனவு கண்டார்! – முதல்வர் ஸ்டாலின்!

கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?

ℳsd ❝இதயவன்❞

திமுகவின் பூச்சாண்டி காட்டும் வேலை, அதிமுகவிடம் எடுபடாது~ டி. ஜெயக்குமார்

இன்னுமா இந்த நமத்துபோன இந்த பழைய டயலாக்குகளை சொல்லிட்டு திரியுறீங்க ஜியை பாத்து கத்துகோங்க டைசன்?!

ச ப் பா ணி

செருப்பு அணியாததை குத்திக் காட்டி சொல்கின்றன கற்கள்

குருநாதா

சொன்னா கேளு மச்சான் உடனேலாம் கல்யாணம்

பண்ணி குழந்த பெத்து #Dad_Son_Twitter லாம்

போடமுடியாது டா

லாக் ஆப்-

“செந்தில் பாலாஜி குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை” – அமலாக்கத்துறை!

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share