இன்னைக்கு சாயங்காலம் வழக்கம்போல டீக்கடைக்கு போலாம்னு கிளம்புறேன். தெருவுல 6 நாயிங்க சண்ட போட்டுட்டு இருந்துச்சி… அப்ப பாத்து ஒரு சின்ன பையன் அவன் பாட்டுக்கு அதுகள கண்டுக்காத மாறி சைக்கிள் ஓட்டிட்டு வந்தான்.
அவ்வளவு தான், ஆறு நாயும் சம்பந்தமே இல்லாம… அவன் மேல பாஞ்சி கடிச்சிடுச்சி. அதுகள விரட்டி விட்டுட்டு பையன ஆஸ்பத்திரி கூட்டு போய் ஊசி போட்டு வீட்டுல கொண்டு போய் விட்டு வந்தேன்.
நாய் குலைச்சா கண்டுக்காம போகணும் சரி… நாய் பிரச்சனைக்காக மக்கள் குரல் குடுத்தா, அதை
கண்டுக்காம கவர்மெண்ட் போக கூடாது… இதுக்கு எப்போ தான் தீர்வு கிடைக்கும். update kumaru memes trolls march 16
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes trolls march 16

செங்காந்தள்
‘ரூ’ வேதான் கடவுளப்பா, அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா.
நாகப்பட்டினத்தான் ❁
டாஸ்மாக்ல சேல்ஸ்மேன் 10 ரூபாய் கூடுதல் வாங்குனா அது செந்தில்பாலாஜிக்கு போகுதுன்னு சொல்றான்..!
அதுவே சிலிண்டருக்கு டெலிவரி பாய் 50 ரூபாய் கூடுதல் பணம் வாங்குறானே அது எங்க மோடிக்கு போகுமோ?

சரவணன். 𝓜
முற்றுப் புள்ளிகளை கமாவாக்கி முயற்சிப் புள்ளிகளைப் போல மாற்றுபவர்…
~ சாதனையாளர் தானே?
அதான் இல்ல, மனைவி..!
▶படிக்காதவன்™✍
மதியம் சாப்டதும் கொஞ்சநேரம் தூங்கலனா அப்ப மதியம் சாப்டதுக்கு என்ன மரியாதை’னு வெயில் கேட்குற மாதிரியே இருக்கு இப்பல்லாம்…

Sasikumar J
மீன் கடையில செதில் நல்லா எடுத்துக்கொடுங்க, கொஞ்சம் மெலிசா ஃபீஸ் போடுங்க அப்படின்னு சொன்னா அவரு எதையுமே கண்டுக்காம அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் அப்படிங்கற ரேஞ்சுக்கு கொடுக்கிற மாதிரி தான் பண்ணிக்கிட்டு இருக்கார்…!

சரண்யா
எல்லோரும் எதிர் பார்ப்பது கேள்விக்கான பதிலை அல்ல,
அவர்கள் எதிர்பார்த்த பதிலை…

ச ப் பா ணி
ஃப்ரிட்ஜ்க்கு அப்புறம் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருப்பது ஃபேன் தான்
வெயில் காலம்
லாக் ஆஃப்