இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அப்போ டிவில ஒரு நியூஸ் ஓடிட்டு இருந்துச்சி.
அதுல பேசிட்டு இருந்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “இந்தி மொழிய எதிர்க்குறாங்க… ஆனா காசுக்காக இந்தி மொழியில் படத்த டப்பிங் செய்து வெளியிடுறாங்க’னு ரொம்ப நக்கலா பேசிட்டு இருந்தாரு.
இத கேட்டதும், ‘அவங்களுக்கு தெரிஞ்ச மொழி இந்தி தான். அதுல தானே டப் செய்து வெளியிட முடியும்.. இல்ல நீங்களும் தமிழ்ல தான் படத்தை பார்க்கணும்னு சொன்னா அது தானே திணிப்பு”னு தோனுச்சு…
இத நண்பர்கிட்ட சொல்லவும், பவன் கல்யாண் 8 வருசத்துக்கு முன்னாடி ‘இந்தி திணிப்ப ஆவேசமா எதிர்த்து பேசுன வீடியோவ காட்டினாரு. சிரிப்பு வந்துருச்சி. update kumaru memes trolls march 15
நீங்க அப்டேட்ஸ் பாருங்க! update kumaru memes trolls march 15

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
ஒவ்வொரு ஆணும் வெள்ளிக்கிழமை சாயங்காலம் புது மாப்பிள்ளை மனநிலையில தான் இருக்கான். மேனேஜர் என்ன புது வேலை தந்தாலும் திங்கட்கிழமை செஞ்சுருவோம்னு வாக்குறுதி தர்றான்.
ஞாயித்துக்கிழமை சாயங்காலமா தான் வீக்எண்ட் மோகத்துல தான் பண்ண சத்தியம் எதுவும் நடைமுறைக்கு ஒத்து வராதுன்னு உரைக்கும்.

saravankavi
”வறுமை ஒழிய இலவசம் வழங்கும் கலாசாரத்தை ஒழிக்கணும்” – Infosys நாராயண மூர்த்தி
நீங்க ஏன் எல்லோருக்கும் Infosys ல வேலை கொடுத்து வறுமையை ஒழிக்க கூடாது. அப்படியே பல தலைமுறைகளுக்கு நீங்க சேர்த்து வச்சிருக்கும் சொத்துக்களை அரசாங்கத்துக்கு கொடுத்து வறுமையை ஒழிக்க உதவலாமே சார்..?

LogeshPeriyasamy 🇮🇳
கார் பார்க்கீங் இருந்தால் தான் சென்னையில் கார் வாங்க முடியும் என்பது போல மாடு தொழுவம் இருக்க இடம் இருந்தால் தான் மாடு வளர்க்கனும் என்ற அரசு அறிவிக்கனும்.

balebalu
குழந்தைகளுக்கு பள்ளியில் வலிய திணிப்பதையும்
சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணுவதையும்
ஒப்பிட்டு பேசும் அளவிற்கு தான்
ஒரு மாநிலத்தின் துணை முதல்வருக்கு
அறிவு உள்ளது என்பதை நினைக்கும் போது அந்த ஊர் மக்களை நினைத்து பரிதாபம் தான் வருகிறது 😔🚶

கடைநிலை ஊழியன்
நா உருப்பட்டுருவேன் னு ஜோசியகாரர் சொன்னாரு..
நீ உருப்பட்டுருவ னு சொல்லிருக்கான்.. அவன் கண்டிப்பா ஒரிஜினல் ஜோசியகாரனாவே இருக்காது டா..

குருநாதா
அவளுக்காக நெறைய தடவ அழுதுருக்கேன்
ஏமாத்திட்டாங்களா ப்ரோ?
வெங்காயம் உரிக்க சொல்லுவா

pakyan
நெறைய problem எப்படி solve பண்றதுன்னு தெரியாம கஷ்டப்பட்டேன்
மாசம் 1500 ரூபாய் செலவு பண்ணி
ஈஸியா solve பண்ணிட்டேன்
எப்படி ?
maths tuition போனேன்
லாக் ஆஃப்