இன்னைக்கு டீ கடைல, “ராஜஸ்தான் படிச்ச ஒருத்தரு, கல்யாணத்துக்கு மணப்பெண் வீட்டார் வரதட்சணையாக கொடுத்த ரூ.5,50,000 பணத்தை அவர்களிடமே திருப்பி கொடுத்துவிட்டு, ஒரு ரூபாயும், ஒரு தேங்காயும் வாங்கிருக்காரு.
இதபத்தி ’என்னய்யா இப்படி பண்ணிருக்கே’னு சொந்தக்காரங்க கேட்டுருக்காங்க.. அதுக்கு அவரு, “படிச்ச நானே இதை செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்?” என்று கேள்வி கேட்டுருக்காரு’னு பக்கத்துல இருந்த நண்பர்ட்ட பெருமையா சொன்னேன்.
அதுக்கு அவன், ”மாப்ள நாளைக்கு பொண்ணு வீட்டுல வரதட்சனையா 2 லட்சம் வாங்க போகனும். நீ வந்துரு”னு சொன்னான் பாருங்க. செத்தவன் காதுலயட இவ்ளோ நேரம் சங்கு ஊதிட்டு இருந்தேன்னு அப்படியே ஷாக் ஆகிட்டேன். update kumaru memes & trolls feb 19
நீங்க அப்டேட்ஸ் பாருங்க update kumaru memes & trolls feb 19

mohanram.ko
இங்கே ப்ரீ பஸ் தான் இருக்கு. நாங்க எங்க ஊர்ல ட்ரெயின் லயே ப்ரீயா தான் போவோம்…
எந்த ஊரு?
வட இந்தியா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச?
கிரிக்கெட்ல மஞ்சள் பச்சை ப்ளூ பிளாக்ன்னு ஒவ்வொரு டீமும் ஒவ்வொரு கலர் ஜெர்சி போடறாங்க..
ஏன் எந்த டீமும் வொய்ட் கலர் சூஸ் பண்ணவே இல்லை..?

டீ கிடைக்காத சிந்தனை
பிரதமரே… நீ மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டிய இடம் அமெரிக்கா..
அப்பதான் அடுத்த தடவை டூர் போகும் போது தவுஜன்ட் கரோர்னு நீ பேசற இங்கிலீஜ் அவங்களுக்கு புரியும்..

செங்காந்தள்
தவறை நீங்களே ஒத்திருந்தால் கூட கோபம் வந்திருக்காது.
தவறை இன்னொருவர் மேல் சொல்லும் போது தான் கடுங்கோபம் வருகிறது…!!!

✒️Writer SJB✒️
ஆர்டிஓ ஆபீஸ்ல லைசென்ஸ் தரலையா… ஏன்?
மீ ~ நீ ஸ்கூட்டில வேகமா போகும்போது திடீர்னு எதிரில் ஒரு வயசான பெரியவர் ஒரு சின்ன பையன் வந்துடுறாங்க நீ யார் மேல மோதுவேன்னு கேட்டாங்க
பையன் வாழ வேண்டியவன் அதனால பெரியவர் மேல தான் மோதுவேன்னு சொன்னேன்
பிரேக் போடுவேன்னு சொல்லலையா?
மீ ~ அப்படியா சொல்லனும்??

சகாயம்
நான் மும்மொழி கொள்கையை ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்,
வாவ் சூப்பர் எது அந்த மூணாவது மொழி?
உன் விழி பேசும் மொழி தான்..!!!

மது
அட கருமம் புடிச்சவனே ஸ்கூல்ல 12 வருஷம் படிக்கிற அளவுக்கு அந்த மொழியில் என்னடா பெரிய இலக்கியம் இருக்கு?
திருப்பூர் பனியன் கம்பெனில மூணு மாசம் வேலை செஞ்சாலே முழு ஹிந்தியும் கத்துக்கலாம் டா..!

கமல்
பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்திலேயே ஹிந்தி ஆங்கிலம் மட்டும் தான் கற்றுத் தரப்படுகிறது
இவர்கள் நம்மை மட்டும் ஏன் மும்மொழி கொள்கையை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்?
லாக் ஆஃப்