இன்னைக்கு டீக்கடைக்கு போன இடத்துல சாமியாருங்க ஆன்மீகவாதிகளா, வியாபாரிகளானு ஒரு பெரிய டாபிக் போயிட்டு இருந்துச்சி..
அங்க மூனு மதத்த சேர்ந்தவங்களும் இருந்ததால எல்லோருமே அவங்களுக்கு ஏத்தா மாதிரி, எங்க மதத்துல வியாபாரம்லா இல்ல.. பக்தி தானு சொல்லிட்டு இருந்தாங்க… டீக்கடை மாஸ்டர் வேற, ‘எங்க வாக்குவாதத்துல சண்டைய போட்டுருவாங்களோ’னு பயந்துட்டு இருந்தாரு.
அப்போ தொண்டைய கணச்சிக்கிட்டு வந்த தாத்தா ஒருத்தரு, ”என்னப்பா நீங்க பேசிட்டே இருக்கீங்க… ‘கடவுள் எல்லா எடத்துலயும் இருக்காருனு சொன்னா ஆன்மீகம்… இங்க மட்டும் தான் இருக்கு, வந்து பாருனு சொன்னா அதுல இருக்கு வியாபாரம்‘ னு சொல்லிட்டு போயிட்டாரு.
அதுக்கப்புறம் யாரும் சத்தமே காட்டல… update kumaru memes trolls april 2
நீங்க அப்டேட்ஸ் பாருங்க… update kumaru memes trolls april 2

balebalu
ஒரு பக்கம் property tax கட்டு ன்னு
குப்பை வண்டில மைக் கட்டிக்கிட்டு கரடியா கத்துறாங்க
மறுபக்கம் பணம் கட்ட நினைச்சா site ஓபன் ஆக முடியாம வெச்சுருக்காங்க 😠
சென்னை மாநகராட்சியின் மாஸ் மூவ்மெண்ட்!

balebalu
மீ டூ சி.எம். யோகி ~ தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்க கூடாது ன்னு சொல்லுறதை கூட ஏத்துக்கலாம் ஆனா
உத்திர பிரதேசத்தில் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் கற்று தரப்படுகிறது ன்னு சொன்னீங்க பாரு
அதை மட்டும் ஏத்துக்கவே முடியாது

Joe…😎😎
அண்ணாமலைய மாத்துறதுக்கு பாஜககாரங்க கூட சந்தோஷமா இருக்காங்க, திமுக நீங்க ஏன்ப்பா சோகமா இருக்கீங்க?!
~ அவரை மாதிரி டெய்லி கண்டெண்ட் இனிமே யார் சார் குடுப்பாங்க. ?!

✒️Writer SJB✒️
நேர்மையாக இருந்தால் உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்
ஆனால் சரியான நண்பர்கள் கிடைப்பார்கள்..!
