இன்னைக்கு வெயில் அதிகமா இருந்துச்சு, ஆனாலும் என்னமோ தெரியல டீக்கடை பக்கம் கால் இழுத்துட்டு போச்சு.
அங்க போனா நண்பர் ஒருத்தர் சோகமா காலைல இருந்து அங்கேயே உட்கார்ந்துகிட்டு, ’நித்தியானந்தா இறந்துட்டாருனு சொல்றாங்க. கொஞ்ச நாளா கைலாசா போயிருலாம்னு மனசுள்ள தோனிட்டு இருந்துச்சி. இப்ப அவரே கைலாசம் போய்ட்டாரே. அதான் தாங்க முடியல’னு சொன்னாரு.
’யோவ் அவரு நல்லாருக்காரு’னு அவங்களே சொல்லிட்டாங்க… நீ கடன் வாங்குன கடன்காரன் டீக்கடைக்கு வந்துட்டு இருக்கானு சொன்னே. ஆள் எஸ்கேப் ஆயிட்டாரு.
’அடப்பாவி கடன்காரனுக்கு பயந்துதான், கைலாசா, நித்தியானந்தானு உருட்டிகிட்டு இருந்தானா?’னு டீக்கடக்கார் கேட்டுட்டு சிரிக்குறாரு. update kumaru memes trolls april 1
நீங்க அப்டேட்ஸ் பாருங்க.. update kumaru memes trolls april 1

மாயன்
ஜி ~ சீனாக்காரன் என்னை பாத்து பயப்படுறான்,,
எப்படி ஜி சொல்றீங்க?
ஜி ~ நம் எல்லைக்குள் பெரிய பெரிய பில்டிங் கட்டினா நான் புல்டோசர் வச்சி அதை இடிச்சிடுவேன்னு பயந்து சின்ன சின்ன வீடு கட்டி வச்சிருக்கான்.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
விஜய் எங்க நின்னாலும் எதிர்த்து போட்டயிடுவேன் – பவர் ஸ்டார்
தவெக தொண்டர்கள் : யாரு சாமி நீயி?

Sasikumar J
manager ~ மூணு நாள் லீவு முடிஞ்சு ஆபீஸ் போக வருத்தமா இருக்கு உனக்கு, ஆனா எத்தனை பேர் இன்னைக்கும் லீவு போட போறாங்க அப்படின்னு கவலையா இருக்கு எனக்கு..!

Mannar & company™🕗
காதலில் தோற்றவன் #weddingday கொண்டாடுகிறான்,
கல்யாணத்தில் தோற்றவன் #AprilFoolsDay கொண்டாடுகிறான்!

@Anvar_official
ஆத்திர அவசரத்துக்கு இருக்கட்டுமேன்னு பெண்கள் ரவை வாங்குகிறார்கள்..
மனைவியின் அவசரத்துக்கும்,
கணவனின் ஆத்திரத்துக்கும்!
#உப்புமா

ஜேக்கப்
என்னடா மயிரு வாழ்க்கைன்னு நினைக்காதீங்க
இன்னைக்கு அதுக்கு மட்டும் ஒருமணிநேரத்தில் நூறு விளம்பரங்கள் வருகிறது!

balebalu
அற்பனுக்கு வாழ்வு வந்தால்
காரில் உட்கார்ந்து கொண்டு
தானம் செய்கிறேன் என்கிற பெயரில்
எகத்தாளமாய் சிரிப்பான் 😠
#irfan

✒️Writer SJB✒️
கல்யாணத்துக்கு முன்னே முடி விழுதே என்று கவலைப்படுவதும் கல்யாணத்துக்கு பின்னே அடி விழுதே என்று கவலைப்படுவதும் ஆண் இனத்தின் சாபம்..!!!
லாக் ஆஃப்