சாயங்காலமா அப்படியே ஆபிஸ் முடிஞ்சி டீக்கட பக்கமா போகும் போது எலெக்சன் பேச்ச எடுத்து விட்டாரு சீனியர் சிங்காரம்.
வாக்குவாதம் திமுகல ஆரம்பிச்சி விசிக வர போயி விஜய் பக்கமா வந்துச்சி… ’அதான் ஏற்கெனவே பாஜகவ பத்தி பேசியாச்சே… அவர இயக்குறது மோடிதானு ஒரு தகவல் வேற வருது உனக்கு தெரியுமா’னு கேள்வி கேட்டாரு சிங்காரம்.
அத கேட்டவுடனே ஆவேசமான விஜய் விசிறி வேணு, “சினிமால தான் தளபதி அடுத்த படுத்த இயக்க போறது அட்லீ, முருகதாஸ், கிறிஸ்டோபர் நோலனு சொன்னாங்க… அவர் அரசியலுக்கு வந்த அப்புறமும் விட மாட்டேன்றீங்களே.. இந்த தகவல் செய்திக்கு எப்பதா சார் வரும் எண்டு?’னு கேள்வி கேட்டான்.
அய்யா விஜய்.. நீங்களே இனி எதுனாலும் தெளிவா சொல்லிருங்க… சினிமா மாறி அரசியலயும் கம்முனு ஜம்முனு உம்முனு இருந்தா அப்புறம் டம்முனு இவனுங்க கீழ தள்ளிருவானுங்க..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Abdul Hameed Sheik Mohamed
அங்க ஒருத்தன் கேட்கிறான் ” சாரே…’மனுஷ்ய புத்திரன்’ ங்கிறதுல ‘மனுஷ்ய’ வுக்கும் ‘ புத்திரன்’ க்கும் நடுவில் ‘ ப்’ வரும்தானே? பேரை தப்பா எழுதுறீங்க…”
வேணாம்..ரொம்ப ஓவரா போறீங்க…
நெல்லை அண்ணாச்சி
தெற்கு தேய்கிறது… வடக்கு வாழ்கிறது …அன்று
தெற்கு உழைக்கிறது….வடக்கு உறிஞ்சிகிறது..இன்று
ℳsd இதயவன்
அரசியலும் கிரிக்கெட்டைப் போல் தான், கேட்சுகளை கைவிட்டால் போட்டிகளை இழக்க நேரிடும் ~ பிரஷாந்த் கிஷோர்
நிதீஷ்குமார் மாதிரி கேட்ச்யை விட்டுட்டு மேட்ச் பிக்ஸிங் செய்யலாமே?!
balebalu
எதுக்குடா சிரிக்குற ?
இதே மாதிரி நாளைக்கு விஷால் கட்சி ஆரம்பிக்குறப்ப
யோகி பாபு ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் ன்னு
நினைச்சு பார்த்தேன் சிரிச்சேன்.
ச ப் பா ணி
தன் மொபைலை பிறரிடம் கொடுக்கும் போது.. பெத்த பெண்ணை பிரிவது போல் ஃபீல் பன்றாங்க ஆண்கள்
நெல்லை அண்ணாச்சி
ச.ம.க. கூட்டணி குறித்து 15 நாட்களில் முடிவு….
உலகில் சிறந்த தலைவர் மோடிஜி…சரத்குமார்
# கொண்டைய மறைங்க நாட்டாமை
https://twitter.com/Kaviit7P/status/1753810733492801886
ரஹீம் கஸ்ஸாலி
லட்டர் பேட் கட்சி கேள்விப்பட்டிருக்கிறோம்.
கட்சி பெயரையே லட்டர் பேடில் அறிவிக்கும் கட்சியை இப்பத்தான் கேள்விப்படுறோம்
balebalu
எதுக்குடா சிரிக்குற ?
இதே மாதிரி நாளைக்கு விஷால் கட்சி ஆரம்பிக்குறப்ப
யோகி பாபு ரியாக்க்ஷன் எப்படி இருக்கும் ன்னு
நினைச்சு பார்த்தேன் சிரிச்சேன்
பரமசிவம் ராமசாமி
மாமா , ஏப்ரல் மாசத்துல ஆரம்பிக்க வேண்டியது இப்பவே ஆரம்பிச்சாச்சு..
என்ன மாப்ளே? எலக்சனா?!!
இல்ல மாமா..வெய்யில்..
இப்பவே மண்டய பொளக்குது…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெற்றி நிறைய பட்டையுடன் வழிபாடு : ராகுலா இது?
‘அமித் ஷாவுடன் சந்திப்பு…’ : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ராஜினாமா!