‘வேட்டையன்’ அலப்பறைகள்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பன் ஒருத்தன்கிட்ட இன்னைக்கு போன்ல பேசிக்கிட்டு இருந்தேன்.

“வேட்டையன் படம் வந்திருச்சான்னு” கேட்டான்…

“ஆமாடா நேத்தே தியேட்டர்ல ரிலீஸ் ஆகிருச்சுன்னு” அவன்கிட்ட சொன்னேன்..

“அது எனக்கும் தெரியும்… தமிழ் ராக்கர்ஸ்ல வந்துருச்சான்னு” கேட்டான்.

”வேட்டையன் படத்துல வர்ற மாதிரி மொதல்ல ஒன்ன தாண்டா என்கவுன்ட்டர் பண்ணனும்னு” சொன்னேன்…

போனை கட் பண்ணிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

mohanram.ko
தொகுதியில் நுழைய விடாம, விரட்டி அடிக்கப்பட்ட வேட்பாளர்கள் எல்லாம் எப்படி ஜெயிச்சாங்கன்னு கேட்கறாங்க.. அவுங்க ஏன் வெயில்ல வீணா அலையனும்னு, நல்ல எண்ணத்துல திருப்பி அனுப்பியதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க…
Mannar & company™
புரட்டாசி மாதத்தில் தப்பிக்கும் ஆடு, கோழிகள் தீபாவளிக்கு உயிரை விட்டுவிடுகின்றன!
Sasikumar J
ஸ்கூல் படிக்கும்போது பண்டிகைக்கு அடுத்து வரும் நாள் கலர் டிரஸ் எப்படியோ அதே போலதான் ஆபீஸ்ல பண்டிகைக்கு முன் ட்ரடிஷனல் டிரஸ்…!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அண்ணா.. நாலு பப்ஸ் தாங்க.. சாப்பிடவா, பார்சலா..? சாப்பிடதான்.. பார்சல் பண்ணிடுங்க..
கடைநிலை ஊழியன்
ஆயுத பூஜை கொண்டாடிட்டு தான் வீட்டுக்கு போகனும் சொல்றானுங்களே தவிர.. சுண்டல், பொரி ’ய கண்ணுல காட்ட மாற்றானுங்களே..
Ammu
மாசம் 30k சம்பளம் வாங்குறவனும் EMI இருக்கு commitment இருக்குனு புலம்புறான்..
மாசம் 1L ,2L சம்பளம் வாங்குறவனும் EMI இருக்கு commitment இருக்குனு புலம்புறான்..
அப்போ யாரு தான்டா வாங்குற சம்பளத்துல கடன் இல்லாமல் வாழ்றிங்க 
படிக்காதவன்™
சென்னையில் முதலில் கார் ரேஸ் நடந்தது அப்புறம் விமான சாகச காட்சி அடுத்து படகு காட்சி…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share