ஆளுநரே இதெல்லாம் நியாயமா? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீ குடிக்க போயிருந்தேன்.

“என்னய்யா… சட்டமன்றத்துல இன்னைக்கு நடந்த நிகழ்வுகளையெல்லாம் பார்க்கும் போது அவசர காலம் தான் நினைவுக்கு வருதுன்னு ஆளுநர் சொல்லியிருக்காரு பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல.

ADVERTISEMENT

“ஆமா நண்பா… ஆளுநர் இன்னைக்கு சட்டமன்றத்துல 10 நிமிஷம் கூட இருக்கல. அவசரம் அவசரமா 9.35 மணிக்கெல்லாம் கிளம்பி, ஆளுநர் மாளிகைக்கு போய்ட்டாரு. ஒரு குட்டி தூக்கத்த போட்டுட்டு சாயங்கலாம் அஞ்சு மணிக்கு அவசர காலம்ன்னு ட்வீட் போடுறாருன்னு” சொன்னாப்ல…

ஆளுநரே இதெல்லாம் நியாயமா?

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ADVERTISEMENT

வேட்டியை இடுப்பில் கட்டி, அவிழாமல் இழுத்து பிடிப்பதிலேயே வேட்டி தினம் முடிவடைந்து விடுகிறது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

தமிழ் மொழி மீது ஆளுநருக்கு அன்பும் மரியாதையும் உள்ளது – ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு.

அந்த ஈர வெங்காயம் எதுவும் வேணாம், அந்தாளுக்குள்ள வேலை எதுவோ அதை முதல்ல ஒழுங்கா செய்ய சொல்லு போதும்.

ச ப் பா ணி

சில துன்பங்களை நாம் தேர்ந்தெடுக்கிறோம் சில துன்பங்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கிறது

Mannar & company™????

பனி, குளிர்காலங்களில் காதை மூடிக்கொண்டு இருந்தால் ‘சளி’ பிரச்சினைகள் இருக்காது,

கணவன், மனைவி சண்டை நேரங்களில் வாயை மூடிக்கொண்டு இருந்தால் “சனி” பிரச்சினைகள் இருக்காது!!

கடைநிலை ஊழியன்

தல சீவும் போது.. நாலு, அஞ்சு முடி சீப்பு ‘ல வந்தா, முடி கொட்டுது னு சொல்லலாம்..

40, 50 முடி சீப்பு ‘ல வந்தா, என்னனு சொல்றது..

Sasikumar J

பூட்டை போல நாம் உண்மையா, பாசமாக இருந்தாலும் பணம் என்ற சாவி தொலைந்து போன பிறகு நம்மை உடைத்து தான் பார்ப்பார்கள்…!

காளையன்..

கட்டிட்டு
வந்ததுதான்
நம்ம பேச்ச கேட்கறதில்ல.. நாம
கட்டற வேஷ்டியும்
நம்ம பேச்ச கேட்கறதில்ல..

அதனால
“உலக ஒட்டிக்கோ
வேஷ்டிதின வாழ்த்துகள்”..

கடைநிலை ஊழியன்

யாருடா நீ.. எவ்ளோ அவமான படுத்துனாலும், திரும்ப அவனுங்க கூடயே போய் சுத்துறியா டா..

லாக் ஆஃப்

டிரான்ஸ்ஃபருக்கு இப்படி ஒரு காரணமா? வில்லங்க சர்ச்சையில் டிஐஜி… கொதிக்கும் பெண் போலீசார்!

9 குடும்ப உறுப்பினர்களை இழந்த செல்ல நாய்… விமான விபத்தில் தாங்க முடியாத சோகம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share