நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்.
“இந்த ஓப்போ மொபைல்ல ஒரே பிரச்சனையா இருக்குன்னு” சொன்னாப்ல…
“சாம்சங் மொபைல் நிறுவனத்துல தான பிரச்சனை போயிக்கிட்டு இருக்குன்னு” அவருக்கிட்ட கேட்டேன்…
”யோவ். என்னோட ஓப்போ மொபைல்ல பிரச்சனையா இருக்குன்னு சொன்னேன்யான்னு” சொல்றாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
நம்முள் இருக்கும் தமிழன் ஒளிந்து கொள்வது.. ஏ.டி எம்மில் வரும் மொழித்தேர்வின் போது..

கோழியின் கிறுக்கல்!!
‘தளபதி’ ‘பம்பாய்’ பாரத்துட்டு அரவிந்த்சாமி மாதிரி Boyfriend வேணும்னு கேட்டாங்க, இப்ப ‘மெய்யழகன்’ பாரத்துட்டு அரவிந்த்சாமி மாதிரி கணவன் வேணும்னு கேட்கிறாங்க!!

mohanram.ko
தீபாவளி வந்துடுச்சி போல.. எப்படி கண்டுபிடிச்ச… அதான்… கடன் கேட்டு வந்திருக்கியே
ச ப் பா ணி
இன்னும் 10 அமாவாசைக்குள் பாருங்க மாற்றம் வரும்’ -திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு #வரலனா..அடுத்த பத்து அமாவாசைக்குள் வரும்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
சூப்பர் ஸ்டார் பி லைக்: அய்யோ.. இப்ப அப்படியே திரும்பி சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையை பத்தி நம்ம கிட்ட கருத்து கேப்பாங்களே..
ச ப் பா ணி
ஆம்னி பேருந்துகள் அதிகம் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை.. தீபாவளி பண்டிகை அருகில் வந்ததற்கான அறிகுறி

கோவிந்தராஜ்
போனவருசம் தீபாவளிக்கு வாங்கனதே இன்னும் இருக்கு! பட்டாசா? இல்ல கடன்!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
எங்க ஊர்ல மொதல்ல சாப்ட்டீங்களான்னு தான் கேட்போம் is a word.. என்ன சித்தப்பூ, சாப்ட்டீங்களா.. is an emotion.

ச ப் பா ணி
ரொம்ப நாள் கழிச்சு பேசுவோமேனே நண்பனுக்கு கூப்பிட்டேன். இப்பதான் நானே உனக்கு கால் பண்ண நினைச்சேன்னு சொல்றான். இந்த பொய்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனைனு பார்க்கனும்
லாக் ஆஃப்