இன்னைக்கு ஏர்போர்ட்ல பிரஸ் மீட் பண்ண நம்ம சூப்பர் ஸ்டார்கிட்ட சார், திருப்பதி லட்டு விவகாரத்துல உங்க கருத்து என்னனு பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ருக்காங்க… உடனே நம்ம சூப்பர் ஸ்டார், “சாரிங்க… நோ கமெண்ட்ஸ்னு” சொல்லிட்டு நைசா எஸ்கேப் ஆகிட்டாரு…
தலைவரு பரவாயில்லை கொஞ்சம் உஷாரா தான் இருக்காரு. எங்க நம்மலையும் பவண் கல்யாண் கிட்ட மன்னிப்பு கேட்க வச்சிருவாங்களோன்னு மழுப்பலா பதில் சொல்லிட்டு கிளம்பிட்டாரு.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Mannar & company™
வாடகைக்கு வீடு பார்க்கவோ, சொந்தமாக வீடு / இடம் வாங்கவோ சரியான நேரம் மழைக்காலம்தான்! :எங்கெல்லாம் மழைநீர் Christians தெரிஞ்க்கலாம்!!
வசந்த்
மனைவியின் “ஹலோ…. எங்க இருக்கீங்க” என்ற வார்த்தைக்கு அடர்த்தி அதிகம்.
Mannar & company™
சினிமால “என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்”டா நடிக்கிறவரும், என்கவுன்டர் பத்தி கருத்து கேட்டால்
“நோ கமெண்ட்ஸ்”னு சொல்றவரும் ஒரே ஆளா..?!
வசந்த்
தினமும் காலையில் குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வரும் அனைத்து அப்பாக்களும் “Delivery Dad” என்று அன்போடு அழைக்கப்படுவார்கள்.
Sasikumar J
நல்லா படிச்சு வேலைக்கு போய் ஹார்டு ஒர்க்கர் அப்படின்னு பேரு வாங்குறதுக்கு ஆவரேஜா படித்து மேனேஜர் அப்படின்னு பெயர் வாங்கலாம்…!
கோழியின் கிறுக்கல்!!
புரட்டாசிக்கு விரதமும் இருப்பான்!
சனாதனம்னு சொல்லிட்டு யாராவது வந்தால் புரட்டி புரட்டி எடுப்பான்!!
ரஹீம் கஸ்ஸாலி
செப்டம்பர் 29 முதல் நவம்பர் 25 வரை வானில் இரண்டு நிலவுகள் தோன்றும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!
நல்லவேளை இரண்டு நிலவுகளாம். இதுவே இரண்டு சூரியன்களாக இருந்தால் நம்ம எரிஞ்சு போய்ருப்போம். ஒரு சூரியனையே சமாளிக்க முடியல
கடைநிலை ஊழியன்
stress சா இருந்தா சினிமா’க்கு போங்க ப்ரோ.. stress குறையும்..
இப்ப வர படத்த எல்லாம் பாத்தா தான்டா stress சே ஆகுது..
ச ப் பா ணி
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்..
என்ன ஒருத்தியும் காணோம்
#90கிட்ஸ்
கோழியின் கிறுக்கல்!!
இந்திய கிரிக்கெட்டின் அரசியலை “ஜீவா” படம் பேசியது,
உள்ளூர் கிரிக்கெட்டின் அரசியலை ‘லப்பர் பந்து’ பேசுகின்றது!!
லாக் ஆப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவியா? – எடப்பாடி காட்டம்!