தினுசு தினுசா பிரச்சனை வருதே – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கிட்ட இன்னைக்கு போன்ல ஃபார்முலா கார் ரேஸ் பத்தி பேசிக்கிட்டு இருந்தேன்.

“நேத்து பிராக்டிஸ் மேட்ச் நடந்துக்கிட்டு இருந்தப்ப ஒரு நாய் குறுக்க ஓடுனதால கொஞ்ச நேரம் பரபரப்பாகியிருச்சுன்னு” அவருக்கிட்ட சொன்னேன்…

“என்ன நண்பா சொல்றீங்கன்னு” ஆச்சரியமா கேட்டாப்ல.

“ஆமா நண்பா… நாய் குறுக்க ஓடுனதால, ஃபார்முலா பந்தயம் நடக்குற இடத்த சுத்தி இன்னைக்கு மாநகராட்சி ஊழியர்கள் நாய்ங்கள பிடிக்குற பணியில தீவிரமா இருக்காங்கன்னு” சொன்னேன்…

“சென்னையை அமெரிக்கா ரேஞ்சுக்கு டெவலப் பண்ணாக்கூட இந்த நாய்ங்க தொல்லை தாங்க முடியாது போலையேன்னு” வருத்தப்பட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Arun Pandiyan

Pan India movie casting nowadays.

ஆந்திரால இருந்து ஒருத்தன் வா

கர்நாடகால இருந்து ஒருத்தன் வா

ஹிந்தி பேசுற பிளம்பர் ரெண்டு பேரு வா

கோழியின் கிறுக்கல்!!
பசி நேரத்தில் பார்சல் வாங்க காத்திருப்பது, ஓர் பெரும் தண்டனை!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இவங்களே ஒரே தேதில படம் ரிலீஸ்னு சொல்லுவாங்களாம்.. அப்புறமா இவங்களே அவர் நல்லவர் வல்லவர் பாவம் வயசானவர் அவர் படமே வரட்டும்னு வாபஸ் வாங்கிக்குவாங்களாம்..
Mannar & company™
இருக்கிறதுலேயே ஓரளவுக்கு சுத்தமான கடைசி நல்ல ஜீன்ஸ் பேண்டையும் சேறாக்கி விடுவதே மழையின் வேலையாக இருக்கிறது!
தர்மஅடி தர்மலிங்கம்
“எம்.பி. சீட் தருவதாக சொன்னார்கள்” – விஜயதரணி! இவங்க பொலம்பறதை பார்த்தா அங்க உட்கார கூட சீட் தரல போலயே.?!
Mannar & company™
ஒரு பறவை கூண்டில் இருப்பதற்கும், கூட்டில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள்தான் மனைவி அம்மா வீட்டில் இருப்பதற்கும் மாமியார் வீட்டில் இருப்பதற்கும் உள்ள வித்தியாசங்கள்!
Kirachand
பாஜகவுக்கு தற்போது பொறுப்புக்கு வந்துள்ளவர்கள் திறமை பண்பாடு மிக்கவர்கள்! – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அதிமுகவில் அப்படி யாருமே இல்லைன்னு ஆதங்கப்படுகிறாரோ?
????????????????????????????
ஞாயிறும் அதுவுமா late ஆ எழுந்து வந்து பார்த்தா மேசைல இன்னைக்கு சமைக்க தேவையான பொருள் எல்லாம் இருக்கு. காலையிலயே எழுந்து வாங்கி வச்சு இருக்காங்க. காண்டா ஆகுமா ஆகாதா?? ~பேசாம மறுபடி போயி தூங்கிடுவோமா??
Mannar & company™
சில ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கனுக்கும் மட்டனுக்கும் நடுவில் க்ரூப்ல டூப்பா வருவது இந்த ‘மீல் மேக்கர்’ தான்! #vegetable_briyani
தர்மஅடி தர்மலிங்கம்
ரஜினிகாந்த் பற்ற வைத்த நெருப்பு; திமுக-வில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது!’ – ஆர்.பி.உதயகுமார்
இப்படி.. சொல்லி அண்ணாமலைக்கு ஈபிஎஸ்க்கும் பற்றி எரியுற நெருப்பை அணைக்க பாக்கறாரு போல…
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share