இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

பக்கத்து வீட்டுல ஸ்கூல் படிக்குற பையன் ஒருத்தன இன்னைக்கு கிரிக்கெட் கிரவுண்டுக்கு கூட்டிக்கிட்டு போயிருந்தேன்.

“அண்ணே, நீங்களும் லப்பர் பந்து கெத்து மாதிரி கடைசி பந்துல அவுட் ஆகிட்டு வாங்கணா. நான் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுறேன்னு” சொன்னான்..

“டேய்… அது நம்ம தெருவுல விளையாடுற விளையாட்டு. இங்க எனக்கு பேட்டிங் கிடைக்கிறதே அந்த கடைசி பால் தான். அதையும் நீ கெடுத்து விட்றாதன்னு” சொல்லி சமாளிச்சேன்.

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டு இருக்குது…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
சாமி பூ வாங்கிட்டு வாங்கன்னு மனைவி சொன்னால்.. மல்லிப்பூவும் வாங்கிட்டு வர்றானானு டெஸ்ட் பன்றதுக்குதான்
கோழியின் கிறுக்கல்!!
ஹோட்டலில் சாப்பிடும் பொழுது அப்பாவின் தட்டே, குடும்பத்திற்கான Waste தட்டு!!
Gopi’s Troll
மாநாட்டு பூஜைக்கு வருவனு பாத்தா…???
படத்துக்கு பூஜைய போட்டு, பூஜாவ பாக்க போன பாத்தியா..???
கில்லினே நீ..!!!
Sasikumar J
நம்மள யாராவது கழுவி ஊத்துறாங்க அப்படின்னா அதை கெட்டதுக்குன்னு எடுத்துக்கமா நல்லதுக்குன்னு எடுத்துக்கணும் ஏன்னா பாத்திரத்தை கழுவி வச்சாதான் நல்லா பளபளன்னு இருக்கும்…!
Mannar & company™
அண்ணே.. போருக்கும், அக்கப்போருக்கும் என்னணே வித்தியாசம்?! நாட்டுக்கும் நாட்டுக்கும் சண்டை நடந்தால் அது ‘போர்’, எங்கேயோ வெளிநாட்டில் சண்டை நடந்தால் தமிழ்நாட்டில் காய்கறி, பொருட்களின் விலையை ஏத்துறான் பாரு அதுதான் “அக்கப்போர்”!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பெண்கள் யாருக்காவது போன் பண்ணா, போன்ல பேசறவங்களை விட அவங்க பின்னால யார் என்ன பேசிக்கறாங்க, வேற என்ன எல்லாம் சத்தம் கேட்குதுன்றதுல அதிக கவனம் செலுத்துவாங்களாம்.. ‘பெண் புத்தி ‘பின்’ புத்தி..’ன்னு சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும்..see more
குருநாதா
என்னுடைய எல்லா தோல்விகளுக்கும் ஒரே காரணம்.. காரணங்களை தேடிக்கொண்டே இருப்பது தான்..
செங்காந்தள்
வீடுகளுக்குத் தான் புரட்டாசி. ஹோட்டல்களுக்கு செப்டம்பர் & அக்டோபர்…!!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தளபதி என என்னை முதலில் அறிவித்த திருச்சி சிவா… -புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் பெருமிதம்!
சட்டமன்றத் தேர்தல் எக்சிட் போல் முடிவுகள்! – ஹரியானாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்?

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share