மாநாடா படம் ரிவ்யூவா? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு விஜய் மாநாட்டுக்கு போன நம்ம நண்பர் ஒருத்தர் கிட்ட, “ப்ரோ மாநாடு எப்படி இருந்துச்சுன்னு” கேட்டேன்

அதுக்கு நண்பர், “ப்ரோ… ஃபர்ஸ்ட் ஹாப் நல்லா இருந்துச்சு… செகண்ட் ஆஃப் ஆவரேஜ். இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு” சொன்னாப்ல.

“யோவ்… என்னய்யா படம் ரிவ்யூ மாதிரி சொல்றன்னு கேட்டதும், இல்ல ப்ரோ விஜய் படம் பார்த்து பார்த்து அப்படியே சொல்லி பழகிட்டேன். இனிமே தான் கொஞ்சம் கொஞ்சமா மாத்தனும்னு” சொன்னாப்ல.

மாநாடு வெற்றி பெற்றதுக்கு அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…  

Raagh-ol
பழம் ‘விக்கிற வண்டி’ யில் ஆட்டோ மோதி விபத்து
Sun news ~ ‘விக்கிர வண்டியில் தவெக மாநாட்டில் நடந்த பயங்கரம்’
4Konney puduven adhu pazhlam vikkira vandi
V!©KY ¶ügâzh
அண்ணா வர வரைக்கும்…. வந்தவங்களுக்கு அண்ணா நடிச்ச படத்த போட்டு காட்டுயா புஸி
      
கடைநிலை ஊழியன்
ஏன்ணே அவன அடிக்கிறீங்க.. மாநாடு முடிஞ்சு.. சாப்பாடு எப்ப போடுவாங்க னு கேக்குறான்..
ச ப் பா ணி
பலர் சரியான பாதையில் போவதற்கு கூகுள் மேப்’ பும் ஒரு காரணம்
Sasikumar J
எதிர்கட்சிகள் பிடிக்கலைன்னா சட்டமன்றத்தில் இருந்து ஏதாவது காரணம் சொல்லி வெளியில் நடப்பு செஞ்சிடலாம் ஆனா கணவன் ஜவுளிக்கடையில் இருந்து வெளிவர முடியாது…!
சரவணன்
வீக் எண்டின் கடைசி நேரம் மகிழ்ச்சியை வீக் ஆக்கி எண்டுக்கே கொண்டு செல்லும்…
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இந்த மாநாடால ஒன்னே ஒன்னு மிச்சம்.. ஞாயித்துகிழமை ஆனா, சலூன் ட்வீட் கறிக்கடை ட்வீட் போட்டு கழுத்தறுக்கற வலைபாயுதே கிரிஞ்சு ட்வீப்ஸ் கிட்ட இருந்து எங்களை காப்பாத்திட்டடா..
கடைநிலை ஊழியன்
தீபாவளி கொண்டாட, டிரஸ் எடுக்குறது கூட ஈசி தான், வெடி வாங்குறது கூட ஈசி தான், ஸ்வீட் வாங்குறதுக்கு ஈசி தான். இருக்குறதுலே கஷ்டமான விஷயம், சொந்த ஊருக்கு போக டிக்கெட் போடுறது தான் !!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share