இனிமே ஒரு வாரத்துக்கு இதுதான் ஸ்நாக்ஸா?– அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் வீட்டுக்கு போயிருந்தேன்…

அன்பா வரவேற்ற அவங்க அம்மா, “ஸ்நாக்ஸ் சாப்டுறியாப்பான்னு” கேட்டாங்க..

ADVERTISEMENT

நானும் “எடுத்துட்டு வாங்கம்மானு” சொன்னேன்…

நேரா கிச்சனுக்கு போனவங்க, சரஸ்வதி பூஜைக்கு வாங்கி வச்சு மீந்துபோன பொறியும், கடலையும் எடுத்துட்டு வந்தாங்க…

ADVERTISEMENT

இதையே தான் எங்க வீட்டுல ரெண்டு நாளா கொடுத்து டார்ச்சர் பண்ணாய்ங்க… இங்கேயும் வந்து மாட்டிக்கிட்டோமேன்னு வேற வழியில்லாம சாப்பிட்டேன்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க….

ADVERTISEMENT
நர்சிம்
க்ளைமேக்ஸ் பஞ்ச்
“Policemen are not hunters ”
டைட்டில் சார்?
“வேட்டையன்” ம்ம் 🙂
ச ப் பா ணி
Dress கிடைக்கிறதை விட ட்ரையல் ரூம் கிடைக்கிறதுக்கு தான் லேட்டாகுது
செங்காந்தள்
உங்களை இப்பதான் நினைச்சேன்னு ஒருத்தர் சொன்னால்… அவர் உங்களை சற்றும் எதிர்பார்க்கலேனு தான் அர்த்தம்…!!!
ச ப் பா ணி
Perfume அடித்தால் தான் வெளியே கிளம்புவேன் என்பதும் ஒருவித ‘மண நோய்’
Sasikumar J
கோவில் பக்கத்துல இருக்க பூக்கடை, தேங்காப்பழ கடையில பொருள் வாங்கினா செருப்பு போட இலவசம் தான்…!
ச ப் பா ணி
சேர்ந்தாப்பில லீவ் கிடைச்சதை நினைச்சு சந்தோசப்படுறதா.. லீவுல அவிட்டிங் கூட்டிட்டு போங்கனு நச்சுவதை கேட்டு வருத்தப்படுறதா.. #ஆணின் கஷ்டங்கள்
செங்காந்தள்
விமானத்தை கண்டுபிடிச்ச ரைட் சகோதரர்களை மறக்காமல் இருப்பது நம்ம பஸ் கண்டக்டர்ஸ்தான் போலாம் ‘ரைட்’
வசந்த்
கட் பண்ணிவிட்டாலும் கால் பண்ணிக்கிட்டே இருக்கான் ப்ரோ
கடன் கேளு தம்பி மறுபடி கால் பண்ணமாட்டான்
வாங்குன கடனை கேட்டு தான் காலே பண்ணுறான் ப்ரோ..
Mannar & company™
அடுத்த 10 மாதங்களில் மொத்தம் 50 பாடல்கள் இசையமைக்க வேண்டியது இருக்கிறது. அதை நினைத்தால் இப்போதே எனக்கு தலைவலி வருகிறது. [சிரிக்கிறார்] – இசையமைப்பாளர் அனிருத் இதை நினைத்தால் இப்போதே எங்களுக்கு காதுவலி வருகிறது. [கடுப்பாகிறார்] –ரசிகர்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share