நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன். மாஸ்டர் கிட்ட ரெண்டு டீ ஆர்டர் சொல்லிட்டு, சூடா போட்ருந்த மெது வடையை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சோம்.
நண்பர், “போன வருஷம் பாஜக தேர்தல் வாக்குறுதியில ராமருக்கு கோயில் கட்டுவோம்னு சொன்னாங்க. இந்த வருஷம், அமித்ஷா சீதைக்கு கோவில் கட்டுவோம்னு சொல்லிருக்காரு. நம்ம ஈவிகேஎஸ் இளங்கோவன் ஒரு படி மேல போயி நாங்க ஆட்சிக்கு வந்தா அனுமனுக்கு கோவில் கட்டுவோம்னு கொளுத்தி போட்ருக்காரு. ஆனா, மோடிக்கு எப்போம் கோவில் கட்டப்போறாங்கன்னு தெரியலன்னு” சொன்னாப்ல.
“மோடிக்கு எதுக்கு கோவில்னு” கேட்டேன்.
“அவரு தான் நான் பயோலாஜிக்கலா பிறக்கல, கடவுள் தான் என்னை அனுப்பியிருக்காருன்னு சொல்லிருக்காருல்ல, அதான் பாஜக காரங்க மோடிக்கு கோவில் கட்டப்போறாங்கன்னு” சொன்னாப்ல…
வடை சாப்ட பேப்பர்ல படிஞ்சிருந்த எண்ணெய்யோட கிழிச்சி எறிஞ்சிட்டு அங்க இருந்து ரெண்டு பேரும் கிளம்பிட்டோம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
பள்ளிக்கூடம் எப்படியிருந்தா பிடிக்கும்?
குழந்தைகளுக்கு மூடியிருந்தா, பெற்றோர்களுக்கு திறந்திருந்தா
RCB டு CSK – நாங்க கப் வாங்க மாட்டோம் னு எங்களுக்கே நல்லா தெரியும்..
எப்படி உங்கள வாங்க விடாம பண்ணுனோம் பாத்தியா.. எப்படி பாத்தாலும் எங்க பிஸ்னஸ் சக்சஸ் தான்..
ஆனா நண்பர்கள் கூட இருக்கப்ப மட்டும் பட்டுடவே கூடாது,
வாழ்க்கை முழுசும் வச்சு செய்வானுங்க!!

கஜினி முகமது 17 முறை படை எடுத்து 18 வது முறை தான் வெற்றி
கோஹ்லி ஜெர்சி No.18
அடுத்த வருடம் ஐபிஎல் 18
அதனால IPL2025 ஈ சாலா கப் நம்தே
கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்



ஈ சாலா கப் நம்தே..
