ஹெலிகாப்டர் ஷாட்டும் கப்பல் ஏறும் மானமும்: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு சிஎஸ்கே ரசிகர் நம்ம ஃபிரண்டு ஒருத்தர் கூட பேசிக்கிட்டு இருந்தேன்.

“நேத்து எப்படி மேட்ச் போச்சுன்னு” கேட்டேன்…

“அதெல்லாம் சூப்பரா போச்சு… தோனி சிக்சர் அடிச்சாரு அது போதும் எங்களுக்கு” சொன்னாரு.

அதுக்கு நான், “தோனி ஹெலிகாப்டர் சிக்ஸர் அடிக்கிறது இருக்கட்டும், நீங்க எப்போம் கப் அடிக்க போறீங்க… மானம் கப்பல் ஏறுதுன்னு” சொன்னேன்…

சைலண்ட்டா கிளம்பிட்டாப்ல…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

ரீ ரிலீஸ் என்பது பரோலில் வருவது போல..

ஞாயிற்றுக் கிழமை கல்யாணம் வச்சா, கறி சோறு தான் போடணும்னு சட்டம் போடணும்!!

கோழியின் கிறுக்கல்!!
ஞாயிற்றுக் கிழமை கல்யாணம் வச்சா, கறி சோறு தான் போடணும்னு சட்டம் போடணும்!!
எனக்கொரு டவுட்டு!?
பேசும் போது குறுக்க பேசாதீங்க நான் சொல்ல வந்ததை மறந்துருவேன்னு சொல்றவங்கதான் மத்தவங்க பேசும் போது குறுக்க பேசுவாங்க. வெரிபைட்..
செங்காந்தள்
வெளிநாட்டு தொழில்நுட்பங்கள், கட்டுமானங்கள், பிரமிக்க வைக்கும் விசயங்கள் எல்லாம் அடுத்த நாளே போட்டோ ஷாப் வழியாக இந்தியாவிற்கு சொந்தமாகி விடுகிறது…!!!
Gurubaai
தோனிக்கு send off குடுக்குறதுக்காக csk ஜெயிக்கிற மாதிரிதான் script னு சொன்னீங்களேடா!
கோழியின் கிறுக்கல்!!
‘கனவுகளை துரத்துங்கள்’னு சொன்னதை நம்பி நான் துரத்த, கனவோ என்னைப் பார்த்து பயந்து ஓடிக் கொண்டே இருக்கிறது!!
ஜோ…
அதான் மேட்ச் விண் பண்ணிட்டோம்னே ஊரே சந்தோசமா இருக்கே …நீ மட்டும் ஏன் சோகமா இருக்கே?! ~ மஹி பாயை போயி தோக்கடிச்சிட்டோமே ன்னு வருத்தமா இருக்கு..
செங்காந்தள்
டீ, காஃபிக்கு இனிப்பு குறைவாகப் போடச் சொன்னால் மட்டுமல்ல. சப்பாத்தி கேட்டுச் சாப்பிடுபவர்களையும் சுகர் பேஷண்ட் என்றே நினைக்கிறது சமூகம்…!!!

லாக் ஆஃப்

சென்னையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை..!

ஊழல்களின் தாய் காங்கிரஸ் – மோடி தாக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share