இன்னைக்கு நண்பன் ஒருத்தனுக்கு கால் பண்ணி, “மாப்ள… ஈவ்னிங் படத்துக்கு போகலாம் வர்றியான்னு” கேட்டேன். Update kumaru memes jokes
”டேய் இன்னைக்கு சிஎஸ்கே மேட்ச் இருக்குன்னு” சொன்னான்.
“நீ மேட்ச்லாம் பார்ப்பியா. சரி… இன்னைக்கு சிஎஸ்கேவுக்கும் யாருக்கும் மேட்ச்சுன்னு” கேட்டேன்.
“அது தெரியாது மாப்ள. ஆனால், சிஎஸ்கே மேட்ச்ன்னு மட்டும் தெரியும்னு” சொன்னான்.
“சூப்பர் மாப்ள… நீ சிஎஸ்கே மேட்சே பாருன்னு” சொல்லிட்டு போனை வச்சிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
ஃபேன் காற்றில் உள்ள போதும் வேர்க்கிறது..
“இந்த மாசம் கரண்ட் பில் எவ்வளவு வருமோ”

கடைநிலை ஊழியன்
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்..
நிலா டு தனுஷ் – என்னோட பெயர வச்சு இப்படி ஒரு படம் எடுக்குறதுக்கு, நா கோவம் தான்டா படனும்..
NEEK

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
மீதி இருக்க மேட்ச் எல்லாம் ஆடலாமா இல்லை கிரிக்கெட்ல இருந்து ரிடையர் ஆகறோம்னு சொல்லிட்டு இத்தோட நைஸா எஸ்கேப் ஆயிறலாமா..?

Mannar & company™🕗
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
பின்னே என்னப்பா..
மனசு கஷ்டமாருக்குன்னு கவலையை சொன்னால் அதை எழுதி அப்படியே வாட்ஸ்அப்பில் ஸ்டேட்ஸா வைங்க 24 மணி நேரத்தில் காணாமல் போகும்னு சொல்றான்பா!

▶படிக்காதவன்™✍
நம்ம டிசைன் எப்படி இருக்குன்னா
பரீட்சையில நம்மள பாத்து எழுதுறவன் பாஸ் ஆகிடுவான் ஆனால் அவன் பாத்து எழுதுன அதே சப்ஜெக்ட்ல நாம பெயில் ஆகிடுவோம் ஏன்னா
நம்ம டிசைன் அப்படி…
நெல்லை அண்ணாச்சி
வானத்தில் இருந்துதாவது மணிப்பூரை பார்க்கலாமே..ஜி
மோடி இலங்கை பயணம்

Sasikumar J
பொறுமைசாலிங்க கல்யாணம் ஆன ஆண்கள் மட்டும் இல்ல, இவ்வளவு வெயிலையும் கறிக்கடைல காத்துகிட்டு இருப்பவங்களும் தான்…!
பரமசிவம் ராமசாமி
கையில காசு இருந்தா நல்ல ஒரு
மட்டன் பிரயாணி…
காசு கம்மியா இருந்தா இரண்டு
வடை ,ஒரு ஸ்ட்ராங்
டீ!!
அவ்வளவுதாங்க
சண்டே!!
ArulrajArun
வெளிய தல காட்ட முடியல மாமா
ஏன் மாப்ள எதும் பெருத்த அவமானம் ஆயிருச்சா
அவமானமா , கோடை வெயில் மண்டைய பொளக்குது மாமா

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வண்டியோட வேகத்தை குறைச்சு நிறுத்த வசதியா இருக்கும்ன்றதுக்காக போடற டிராபிக் சிக்னல் மஞ்சள் விளக்கை பார்த்ததும், வேகத்தை அதிகரிச்சு ரெட் விழறதுக்குள்ள ஜங்சனை க்ராஸ் பண்றது தான் தமிழனோட பண்பாடு..