‘ஈ சாலா கப் நமதே’ – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தனுக்கு காலையில கால் பண்ணியிருந்தேன். Update kumaru memes jokes

“மச்சான் எங்க இருக்கன்னு” கேட்டேன்.

“டேய்… கோவில்ல இருக்கேன்டான்னு” சொன்னான்.

இவன் அவ்வளவு நல்லவன் இல்லையேன்னு, “என்ன மச்சான் ஏதாவது விசேஷமான்னு?” கேட்டேன்.

“இல்ல மச்சான் இன்னைக்கு ஐபிஎல் மேட்ச் ஸ்டார்ட் ஆகுதுல்ல. அதனான் இந்த வருஷமாவது ஆர்சிபி கப் அடிக்கனும்னு கடவுள வேண்டிக்கிட்டேன்னு” சொன்னான்.

“ஈ சாலா கப் நமதேன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

நிம்மதிங்கிறது train lower berth மாதிரி..
எல்லோருக்கும் அது கிடைப்பதில்லை

balebalu

அடுத்த தேர்தல் வரை தமிழகத்தில்
கட்சிகளின் தாரக மந்திரம் :

கதவை திற
கூட்டணி வரட்டும்

ArulrajArun

நாம அடுத்தவங்கள ‘impress’ பண்ண போய் தான் நம்ம வாழ்க்கை ‘depression’ ல போயிடுது …

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

சுவையாக சமைக்கும் உணவகத்தை விட, நல்ல கேமராவில் அதிகமாக ரீல்ஸ் எடுக்கப்படும் உணவகத்திற்கு தான் கூட்டம் போகும் என்பான் நவீன சாணக்கியன்.

ச ப் பா ணி

என்னை நம்பாமல் கெட்டவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், நம்பி கெட்டவர் இன்று வரை யாரும் இல்லை,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி

OPS மைண்ட் வாய்ஸ்

நாந்தான் இருக்கேன்ல

mohanram.ko

ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் – செய்தி

பின்ன, பணத்தை கட்டு கட்டி வைக்காம, தனித் தனியாவா வச்சி இருப்பாங்க

கடைநிலை ஊழியன்

that IPL fans today..

IPL ஆரம்பிச்சுடுச்சு.. ஒடியாங்க.. ஓடியாங்க.. =

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share