என்ன பைத்தியக்காரனாவே நினைச்சிக்கிட்டு இருக்க… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கூட டீக்கடைக்கு போயிருந்தேன். Update kumaru memes jokes

மாஸ்டர் கிட்ட ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போட சொல்லிட்டு பேசிக்கிட்டு இருந்தோம்.

நண்பன், “டேய், சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பிட்டாங்க பார்த்தியான்னு” கேட்டான்.

“டேய் நானும் தெரியாம தான் கேட்குறேன். சுனிதா வில்லியம்ஸ்க்கு வாழ்த்து சொல்ற நீங்க. அவங்க கூட வந்த புட்ச் வில்மோர் பத்தி ஏன் பேச மாட்றீங்கன்னு?” கேட்டேன்.

“அப்படியா… நானே சுனிதா வில்லியம்ஸ் பேரை இன்னைக்கு தான்டா கேள்விப்பட்டேன்னு” சொன்னான்.

“நீ மட்டும் இல்லடா உன்னை மாதிரி நிறைய் பேரு இன்னைக்கு இப்படி தான் சோஷியல் மீடியாவுல கதை விட்டுட்டு இருக்காங்கன்னு” சொன்னேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

காம்பஸ் வாங்கி வட்டம் போடும் 2k kids நீங்க எங்க

கை வளையல் கடன் வாங்கி வட்டம் போட்ட அந்த 90kids அவங்க எங்க

ச ப் பா ணி

அதிகாலையில் அணைக்கப்பட்ட மின் விசிறியே வெயில் காலத்தில் அலாரம்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

இதுவரை @grokயை கேள்வி கேட்டவனெல்லாம் ஒரு கேள்விக்கு 50ரூ ன்ற மேனிக்கு எவ்வளவு கேள்வி கேட்டீங்களோ அவ்வளவு காசை எடுத்து வைங்க, இல்லேன்னா ஐடியை டீஆக்டிவேட் செஞ்சுருவேன்னு மஸ்க் மண்டையன் சொல்லப்போறான்.. அவனவன் அலறி அடிச்சுட்டு கேட்ட கேள்வி எல்லாம் டெலீட் பண்ண போறாங்க..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

டேய் மீடியா.. சுனிதா வில்லியம்ஸை விட்ருங்கடா ப்ளீஸ்

கடைசி நிமிசத்துல ஒன்னும் நடக்கல

▶படிக்காதவன்™✍

காற்றை’யும் காசுக்கு விற்பவர்கள்
பஞ்சர் கடைக்காரர்கள்…

Sasikumar J

பத்து ரூபாய்க்கு வாங்குற செல், அதுல கூட பாசிட்டிவ், நெகட்டிவ் ஓட தான் இருக்குது….!

உன்கிட்ட ஒண்ணுமே இல்லையே டா…!!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

நான் சந்தோசமா இருந்தா எனக்கே புடிக்க மாட்டேங்குது.. இன்னைக்கு கவலைப்பட என்ன இருக்குன்னு யோசிச்சு கவலைப்பட ஆரம்பிச்சுறேன். இதுக்கு எதாவது மருந்து எழுதி குடுங்க டாக்டர்..

vijaychakkaravarthy

நீ எப்போ கதவுல “pull”ன்னு எழுதியிருக்குறத பார்த்தும் “push” பண்ணி பார்காம, pull பண்ணுறியோ அன்னைக்குதான் உனக்கு maturity வந்திருக்குன்று அர்த்தம்..உன் வாழ்க்க bright ah இருக்கும்..

ச ப் பா ணி

பேர் தெரியாத எல்லாருக்கும் இருக்கும் புனைபெயர் தான்
‘எக்ஸ்க்யூஸ் மீ’ Update kumaru memes jokes

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share