அண்ணா ரிசல்ட் வந்துருச்சிங்கண்ணா: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு சங்கி நண்பர் ஒருத்தருக்கு கால் பண்ணேன்…

“என்ன நண்பா ரிசல்ட்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு” கேட்டேன்…

“இந்த தடவ ஜஸ்ட் மிஸ்… நம்ம கட்சி தான் மறுபடியும் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டுல 2026 தாமரை மலர்ந்தே தீரும்ன்னு” சொன்னாப்ல…

“ரொம்ப முட்டுக்கொடுக்காதீங்க நண்பா… 400 சீட்னு சொன்னீங்க, தமிழ்நாட்ல புதிய புரட்சி வரப்போகுதுங்கண்ணான்னு உங்க அண்ணா அண்ணாமலை சொன்னாரு… இப்போம் பாத்தீங்கள்ள மெஜாரிட்டி கூட வர முடியல”

“எல்லாம் வெளிநாட்டு சதி நண்பா… ஏஐ டெக்னாலஜி வச்சி எதிர்க்கட்சிங்க ஜெயிச்சியிருக்காங்க அர்னாப் கோஸ்வாமி சொன்னத நீங்க பார்க்கலையா”

“இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கம்பி கட்டுற கதைய விடப்போறீங்கன்னு” கலாய்ச்சேன்

கொஞ்ச நேரத்துல கூப்புடுறேன்னு சொல்லிட்டு போன வச்சவரு தான், ஆளையே காணோம்.

iQKUBAL
அப்றம் என்னப்பா? மூட்டை முடிச்செல்லாம் கட்டிகிட்டு வெளிநாடு கெளம்பிடலாமா?
பரமசிவம் ராமசாமி
தேர்தல் முடிவு.. செவ்வாய்.. வரவாய் இருக்கும் என நினைத்தவர்களுக்கு வெறும்வாய் ஆகிவிட்டது!!
ℳsd இதயவன்
நவ் சந்திரபாபு நாயுடு ~ என் காட்டுல மழை பெய்யுது டெல்லியில இறக்கி விட்டுருங்க சார்..பாஜக காங்கிரஸ் கிட்ட டீலிங் பேசனும்?!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி # மஞ்சுமல் பாய்ஸை டெம்போ வைச்சுட்டு வந்து பார்த்தமே, அதுக்கு நீங்க காட்டுற விசுவாசம் இதானா..?
black cat
இதுல ஒரே சந்தோஷம் என்னன்னா பிஜேபி தனி பெரும்பான்மை வரல
ℳsd இதயவன்
எங்களது வியூகத்தை தற்போது கூறிவிட்டால் மோடி உஷாராகி விடுவார் ~ காங்கிரஸ் தலைவர் கார்கே அவரு உஷாரை இழந்து பல மணிநேரம் ஆச்சு ?!
black cat 
நைட்டு 2 மணிக்கு முழிப்பு வந்துச்சுன்னா பொரண்டு படுக்க வேண்டியதானே மூதேவி…. இதுல அங்க பிரதட்சணம் வேற…..
ℳsd இதயவன்
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் தாரகை வெற்றி ~ விஜயதாரணி ~ ஏலே தமிழக பிஜேபி வயிறு எரியுது லே ?!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share