உங்க அக்கப்போருக்கு ஒரு அளவே இல்லையா? அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

ஆபிஸ் முடிஞ்சு வீட்ல போய் டிவி பார்த்துக்கிட்டு இருந்தேன்…

ஒரு நியூஸ் சேனல்ல காலை 6 மணி முதல் நேரலை இணைந்திருங்கள்னு போடுறானுங்க, இன்னொரு சேனல் பார்த்தா அதிகாலை 5 மணின்னு போட்டுகிட்டு இருந்தானுங்க…

இதை பார்த்த எங்க அப்பா, “தேர்தல் ரிசல்ட்டே 8 மணிக்கு தானடா.. அப்புறம் ஏன் இப்படி பண்றாங்கன்னு” கேட்டாரு.

“8 மணிக்கு தாம்பா ரிசல்ட், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்துற அலுவலர் காலையில எழுந்து குளிச்சி கிளம்பி வாக்கு எண்ணிக்கை நடத்துற இடத்துக்கு வர்ற வரைக்கும் லைவ் போடுவாங்கன்னு” சொன்னேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

நாளைக்கு ரிசல்ட்

ஸ்ரீதேவியா?அழகுமணியா?

#மக்கள் மனநிலை

முகில்
பாப்பாக்கு tution late ஆகிடுச்சுன்னு,குளிச்சு,லுங்கிய கட்டிட்டு வண்டிய start பண்ணி ஏறி உக்காந்தா குளுகுளுன்னு இருக்குது. என்னடான்னு பார்த்தா, குளிச்சுட்டு towel க்கு மேலயே லுங்கிய கட்டிட்யிருக்கேன். இதப்பார்த்துட்டு அப்புடியொரு சிரிப்பு வீட்டம்மாக்கும்,பாப்பாக்கும்
ச ப் பா ணி

ஏ.சி போட்டால் பணம் போடமாட்டாங்க

பணம் போட்டால் ஏ.சி போட மாட்டாங்க

#ஏ.டி.எம் கள்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் – ஜனாதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம். # சேதுராமன் கிட்ட ரகசியமா..?

ச ப் பா ணி

பிள்ளைகள் வளர்வதை காட்டிக் கொடுப்பது ‘ஸ்கூல் பீஸ்களே’

குருநாதா
பேசாம இருந்தா… திமிரு பேசுதானு பாருனு சொல்றாய்ங்க சரி பேசுவோம்னு பேசுனா.. இவ்ளோ வயசாச்சு யார்ட்ட எப்புடி பேசனும்னு தெரியுதானு சொல்றாய்ங்க என்ன கொடுமை ஷர்வணா
வசந்த்
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம்.. கட்சியை விட்டாலும் கடைசி வரைக்கும் நடிப்பதை கைவிட மாட்டார் போலயே

ச ப் பா ணி

நீ இல்லாதபோது டைம் Pause ஆகிவிடுகிறது

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: நம்பிக்கையில் இந்தியா, படபடப்பில் பாஜக… கவுன்ட்டிங் க்ளைமேக்ஸ்!

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: கேசவ விநாயகனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share