ADVERTISEMENT

இதுக்கே இந்த கெடுபிடியா: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு ஆபிஸ்ல பேசிக்கிட்டு இருந்தேன்…

“விஜய் மாணவர்களுக்கு பரிசு கொடுக்குற விழாவுக்கு துபாய்ல இருந்து பவுன்சர்கள் வரவச்சிருக்காங்க பார்த்தீங்களான்னு” கேட்டாப்ல…

ADVERTISEMENT

“பார்த்தேன் நண்பா… இதுக்கே துபாய்ல இருந்து பவுன்சர்கள் வர்றாங்கன்னா மாநாட்டுக்கு லண்டன்ல இருந்து பவுன்சர்கள் வருவாங்க போலையேன்னு” சொன்னாப்ல

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ச ப் பா ணி

இந்தா இதை உங்க வீட்டு பரண் மேல பத்திரமா வச்சிடு னு சொல்லுவது போலவே பீங்கான் பிளேட்டுகளை பரிசாய் கொடுக்கின்றனர்.

ADVERTISEMENT

கோழியின் கிறுக்கல்!!
கல்லூரியில் படிக்கையில், காலையில் Classஐ Cut அடிச்சிக்கலாம்னு விடிய விடிய Match பார்த்தவர்களை, நாளைக்கு வேலைக்கு போகணும் காலையில் Highlights பார்த்துக்கலாம்னு தூங்க வைத்து விடுகிறது வாழ்க்கை!!
கோவிந்தராஜ்
She ~~ உன் லைஃப்ல மறக்க முடியாத ஒன்னு ன்னு எதை சொல்லுவடா
Me ~~ ஒரு தடவை டாஸ்மாக்ல இருந்து சரக்கு போட்டுட்டு திரும்பி வரும்போது… ரவுண்டானால எந்தப் பக்கம் போறதுனு தெரியாமல்…. 2 மணிநேரம் சுத்திக் கிட்டே இருந்தேன்… அதை என் லைப்ல மறக்கவே மாட்டேன்
ச ப் பா ணி

மொபைல் டேட்டாவை ஆஃப் பண்ணி வைத்தால் தான்.. நோட்டிபிகேசன் சத்தம் கேட்காமல் நாம silent mode ல் இருக்க முடிகிறது

படிக்காதவன்

நானும் ரவுடிதான்யா’ங்கிற மாதிரிதான் தற்போது தேமுதிக நிலையும்…

விமலிசம்

தமிழ்நாட்டில் போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. சார் கடைசியா நடிச்ச படத்துல என்ன ரோல்ல நடிச்சீங்க? சிகரெட் பேக்டரி ஓனரு

கோழியின் கிறுக்கல்!!

ஒருசில சமயங்களில் டீச்சர் சொல்றது தப்புன்னு நல்லா தெரிஞ்சும், சொன்ன வேற எப்பயாவது சூழ்நிலையில் நம்மை பின்னிடுவாங்கன்னு அமைதியா இருப்போம், அதே போல் தான் பல சமயங்களில் மனைவியிடமும் அமைதியாக இருந்து விடுதல் நலம்!!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காவல்துறை உதவியுடன் கள்ளச்சாராய விற்பனை: ஆளுநரை சந்தித்த பிரேமலதா

ஜாபர் சாதிக்கை கைது செய்த அமலாக்கத்துறை சென்னை டீம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share