அயோத்தி ராமர் கோவிலோட கூரை முதல் மழைக்கே ஒழுகுதுன்னு தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் சொல்லிருக்காரு…
இந்த செய்தியை நண்பன் ஒருத்தனுக்கு வாட்ஸப்ல ஷேர் பண்ணிருந்தேன்…
“அது ஒன்னும் இல்லைடா… வருண பகவான் கோயிலுக்கு உள்ள வர்றதுக்காக சின்னதா வழி விட்ருக்காங்க. அதை போயி அந்த சாமியாரு மழைக்கு ஒழுகுதுன்னு தெரியாம சொல்லியிருக்காருன்னு” கமெண்ட் பண்ணான்…
“இது அந்த ராமருக்கு தெரியுமான்னு” கேட்டேன்… உடனே ஆஃப் லைன் போயிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
Goat பட பாடல்.. சூர்யா நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் வரும் இரவா பகலா பாடல் சரணத்தில் வரும்.. “என்னை தொடும் தென்றல் உன்னை தொடவில்லையா” சாயலில் இருப்பது போல் தெரிவது எனக்கு மட்டுந்தானா
mohanram.ko
‘முகம் கொடுத்து’ பேசணும்னு ஆசைப்படறாங்க, பியூட்டி பார்லர் வச்சிருக்கறவங்க…
பஸ்ஸுல பிக்பாக்கெட் அடிக்கிறவங்க டிக்கெட் எடுக்காம பிரயாணம் பண்றவங்களை விட கொடூரமானவங்க யார்னா, நம்ம நின்னுட்டு போகும் போது ஒவ்வொரு ஸ்டாப்லயும் இறங்க போற மாதிரியே உடம்பை அசைச்சு நெளிச்சுட்டு இறங்காமலே டிராவலை கண்டினியூ பண்ற டார்ச்சர் கேஸுங்க தான்..
ச ப் பா ணி
பழைய காதலியும், பழைய போட்டோவும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது
mohanram.ko
பொங்கலில் நெய் ஊற்றி சாப்பிடுவதை ‘ஜீரணிக்கவே முடியல’
கடைநிலை ஊழியன்
காதல் செய்தால் பாவம்.. பெண்மை எல்லாம் மாயம்.. உன்னைய யாருடா லவ் பண்ணுனா.. நீயா ஒன் சைடா வேடிக்கை பாத்துட்டு.. இதுல பாட்டு வேற..
ச ப் பா ணி
E.M.I வாழ்க்கையில் சம்பளம் மட்டும் கெஸ்ட் ரோலா வந்துட்டுப் போகுது
ச ப் பா ணி
ஸ்கூல் வேன் வர்றதுக்குள்ள குழந்தைகளை சாப்பிட வைத்து அனுப்புவது..அம்மாக்களின் பெரிய டாஸ்க்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா? புதிய ஆலோசனை!