கடைசி நேரத்தில் கேன்சல் – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

சண்டே அதுவுமா நண்பன் ஒருத்தனுக்கு கால் பண்ணி படத்துக்கு போகலாம்னு கூப்டேன்.

“மாப்ள… சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு தீவிரமா பிரிபேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். என்னால வர முடியாதுன்னு” சொன்னான்.

“அடேய்… நீ மாங்கு மாங்குன்னு என்ன தான் படிச்சாலும் கடைசி நேரத்துல எக்ஸாம கேன்சல் பண்ணிருவாங்க. பார்த்தல்ல நைட் பத்து மணிக்கு மேல அடுத்த நாள் நடக்க இருந்த நெட் எக்ஸாம், நீட் பிஜி எக்ஸாம கேன்சல் பண்ணிருக்காங்கன்னு” சொன்னேன்

“நீ சொல்றதும் சரி தான் மாப்ள… படத்துக்கு டிக்கெட்ட புக் பண்ணு வரேன்னு” சொன்னான்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

செல்ஃபிகளே சிரிக்கச் சொல்லி நிர்பந்திக்கின்றன

செங்காந்தள்

தலைக்கு எண்ணெய் தேய்த்து நேர் எடுத்துச் சீவியவர், முழுக் கைசட்டை அணிந்தவர், சட்டையின் எல்லாப் பட்டன்களையும் போட்டவர் தமிழ் சினிமாவின் நல்லவர்கள்…!!!

ℳsd இதயவன்

ரொம்ப இளமை ஆகிட்டேன் மாமா…

டயட்டா பார்லரா மாப்ள ?

பார்லரா? ப்ளு பெர்ரி இட்லி சாப்பிட்டேன் மாமா?!

செங்காந்தள்

அதிமுக எப்போதும் புறமுதுகு காட்டுவதில்லை!- ஜெயக்குமார்.

அதற்கு விக்கிரவாண்டி இடைத்தேர்தலே சாட்சி

ச ப் பா ணி

உண்பதுவே உறங்குவதுவே உம்முனு இருப்பதுவே #ஞாயிறு

செங்காந்தள்
பெற்றோர்களைத் திட்டினால் கூட புன்னகையோடு போய் விடுகிறார்கள். தன் அபிமான நடிகரைத் திட்டினால் போர் தொடுக்கிறார்கள்…!!!

ச ப் பா ணி

ஆசையா போய்ப் பார்க்கும் Falls எல்லாம் False ஆ தா இருக்கு.. தண்ணி இல்லாமல்

செங்காந்தள்

National Earning Eligibility Test.

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜாமீன் நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றத்தை நாடிய கெஜ்ரிவால்

விஜய்க்கு வாழ்த்து சொன்ன த்ரிஷா… ட்ரெண்டான செல்ஃபி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share