சட்டு புட்டுன்னு ஸ்கூல திறங்கடா: அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போனேன்…

”பசங்களுக்கு ஜூன் 5 வரை லீவ் விட்ருந்தாங்க… இப்ப வெயில் அதிகமா அடிக்குதுன்னு ஜூன் 9 வரை எக்ஸ்டண்ட் பண்ணிருக்காங்க…ரெண்டு நாளா மழை வேற வருது… அதனால லீவ இன்னும் கொஞ்ச நாள் எக்ஸ்டண்ட் பண்ணுவாங்களான்னு என் பையன் கேக்குறான்னு” சொன்னாப்ல…

ADVERTISEMENT

”உங்க வேதனை எனக்கு புரியுது… கவலைப்படாதீங்க மழை வராதுன்னு” அவருக்கு ஆறுதல் சொல்லிட்டு சூடா டீ குடிச்சிட்டு அங்க இருந்து கிளம்பிட்டோம்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ADVERTISEMENT

ச ப் பா ணி

ஒவ்வொரு நினைவு இல்லத்துக்கு பின்னாலும் பல பெற்றோர்களின் கனவு இல்லம் இருந்திருக்கிறது

ADVERTISEMENT

Mannar & company™

இன்னும் சம்பளமே வாங்காத மீ…. மாம்ஸே டீ சாப்பிட்டியா. ஏன்டா… நான் இன்னும் சாப்பிடலையே வாங்கி கொடு…. இப்படித்தான் போகுது..

 

செங்காந்தள்
திருமணம் ஆன எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் ஒளிந்து இருக்கிறான்…!!!
ச ப் பா ணி

நிறைவு is a word சோலி முடிஞ்சுது is an emotion

????வானம்பாடி????
#கருடன்.. ப்பாஆஆ என்னா மூவி இன்னா நடிப்பு மிரண்டுட்டேன்….அதுவும் அந்த க்ளைமக்ஸ் சீன்ல அப்படின்னு ரைட்டப் போடலானு பாத்தா இன்னு நெட்ல கிளியர் காப்பி வரலயாம..

ச ப் பா ணி

துக்க வீட்டில் நைஸாக நழுவிப் போவதற்கு தான்.. சொல்லிக் கொண்டு போகக்கூடாதுனு சொல்லி வச்சிருக்காங்க #முன்னோர்கள் ஒன்றும் see more
சரண்யா
Salary credit மெஸேஜ் வரும் முன்னே, Emi அலர்ட் மெஸேஜ் வரும் பின்னே….
கடைநிலை ஊழியன்
அனிருத் – தாத்தா வராரு கதற விட போராரு.. தாத்தா வராரு கதற விட போராரு.. தாத்தா – டேய், நான் தாத்தா டா.. இவ்ளோ சவுண்ட் போட்டா, எனக்கே ஒத்துக்காது டா..
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share