நண்பர் ஒருத்தர் கூட இன்னைக்கு டீ குடிக்க போயிருந்தேன்.
நண்பர், “தமிழக பாஜகவில் மீண்டும் ஒரு அக்கா – தம்பியான்னு” கேட்டாரு.
“ஆமாமா… அண்ணாமலைக்கும், தமிழிசை அக்காவுக்கும் நடந்த பிரச்சனையில, அமித்ஷா பேச போயி அந்த பிரச்சனை பூதாகரமா வெடிச்சிருச்சு.
அதனால இன்னைக்கு தமிழிசை அக்கா வீட்டுக்கு போய் நம்ம அண்ணாமலை சுவீட் பாக்ஸ் கொடுத்துருக்காரு. இந்த போட்டோவ ஷேர் பண்ணி, அன்பு தம்பி அண்ணாமலையை சந்தித்தது மகிழ்ச்சின்னு நம்ம அக்கா போஸ்ட் போட்ருக்காங்க… நாட்ல இந்த அக்கா – தம்பி பாசம் தாங்க முடியலையான்னு” கமெண்ட் அடிச்சாப்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
கடைநிலை ஊழியன்
ஜி to கூட்டணி & கோ –
G7 உச்சி மாநாடுல எல்லாரும் நம்ம வெற்றிய பத்தி தான் பேசுறாங்க..
இந்த வெற்றிக்கு காரணமே உங்க கூட கூட்டணி வச்சது தான் காரணம் னு சொல்றாங்க..
ச ப் பா ணி
டி20 உலகக் கோப்பை: 3.1 ஓவர்களில் போட்டியை முடித்து அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து
#ஒன் பிட்ச் கேட்ச் மேட்ச் கூட இப்பிடி இருக்காது
Kirachand
மோடிஜி இத்தாலி பயணம்!… பரமாத்மா கட்டளையிட்டு இருப்பாரோ?
2024 நீட் தேர்வு, தவறு நடந்திருப்பதை ஒப்புக்கொண்டது தேர்வு முகமை!”
~ டேய், நீட் தேர்வுல தப்பு இல்லடா, நீட் தேர்வுங்குறதே தப்புதான்டா..
ச ப் பா ணி
இரத்தம் வேண்டுமென்ற தகவலை மட்டும் பகிராமல்
இரத்தத்தையும் மற்றவர்களுக்காக பகிர்வோம் #உலக இரத்ததான தினம்
black cat
SL – நாங்க eliminate ஆகிட்டோம் பாவா .. நீங்க ?
NZ -இல்ல , நாங்க 2 மேட்ச் ஆட வேண்டி இருக்க
SL – சீக்கிரம் eliminate ஆகிட்டு வாங்க பாவா,ஒரு series போடுவோம்

X வலைதளத்தில் நீங்கள் லைக் போட்டால் பிறர் பார்க்க முடியாது – எலான் மஸ்க்
புரிஞ்சி போச்சு அடுத்து லைக் பாக்கணும்ன்னா காசு கட்ட சொல்லி கேக்க போறீங்க அதான
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: லெமன் டீ கொடுத்த தமிழிசை- ஸ்வீட் கொடுத்த அண்ணாமலை- சந்திப்பில் நடந்தது என்ன?
திருச்சி எஸ்.ஆர்.எம். ஹோட்டல் விவகாரம்: தமிழக அரசு விளக்கம்!