சிரிப்பு வைத்தியம்… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு மதியம் சாப்ட பிறகு நண்பன் ஒரு மணி நேரத்துக்கும் மேல விக்கல் எடுத்துக்கிட்டு இருந்தான். update kumaru memes jokes june 1 2025

அவனும் தண்ணி குடிச்சி பார்க்குறான்… கொஞ்சம் நேரம் நடந்து பார்க்குறான். ம்ஹூம் விக்கல் நின்னப்பாடே இல்ல.

ADVERTISEMENT

அந்த நேரத்துல நம்ம சின்னய்யா அன்புமணி நியூஸ் சேனல்ல பேசிக்கிட்டு இருந்தார். 2026 நம்ம தான் ஆட்சிக்கு வருவோம்னு சொன்னதுதான், பயபுல்ல விழுந்து விழுந்து சிரிக்கிறான். கொஞ்ச நேரத்துல விக்கல் காணாம போயிடுச்சி.

உண்மையிலேயே நீங்க மருத்துவர்னு நிரூபிச்சிட்டீங்க ஐயா, நன்றி…

ADVERTISEMENT

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…1 2025

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ADVERTISEMENT

ஒரு சினிமாவை படு கேவலமாக எடுத்து வைப்பதில் ஒரே ஒரு வசதி இருக்கிறது.

படத்தின் இரண்டாம் பாகம் வரும் போது, ‘என்ன இருந்தாலும் பர்ஸ்ட் பார்ட் போல வரவில்லை..’ என யாரும் அலுத்துக் கொள்ள மாட்டார்கள்.

Mannar & company™🕗

நம்புற மாதிரி உருட்டுனா அது மனைவி,
நம்பவே முடியாத மாதிரி உருட்டுனா அது காதலி!

Sasikumar J

இன்னக்கி எதையாவது மாத்தணும் அப்படின்னு நினைச்சா உடனே போய் வீட்டுல இருக்க மாத காலண்டரை மாத்துங்க…!

ஜூன் மாதம் வந்துடுச்சு…!!

Mannar & company™🕗

இந்த ஞாயிற்றுக்கிழமை கறி எடுத்ததுக்கு பதிலா அந்த பணத்தை அப்படியே வச்சிருந்து வர்ற வெள்ளிக்கிழமை பக்ரீத் பண்டிகைக்கு கூடுதலா “கறி” எடுத்துருக்கலாம்!

Mannar & company™🕗

அந்த தம்மாதுண்டு ஈரல்தான் டா

கறி வாங்குன சந்தோஷத்தையே கொடுக்குது!

விமலிசம்

ஹெல்த் டிப்ஸ் கேட்டா காலைல 4 முட்டை ஒயிட் மட்டும் சாப்பிட சொல்றானுங்க.அப்ப மஞ்சக்கருவ என்ன பண்றது? அதை தூக்கிப்போட எப்படி மனசு வரும் முட்டை விக்கிற

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share