எப்போதும் வழக்கமா ஒரு அக்காக்கிட்ட வீட்ல செஞ்ச முறுக்கு வாங்கி சாப்பிடுவேன்.
இன்னைக்கு அவங்ககிட்ட முறுக்கு பாக்கெட் வாங்கினபோது எக்ஸ்ட்ரா அஞ்சு ரூபா சொன்னாங்க…
“என்னக்கா விலையை கூட்டிட்டீங்களான்னு” கேட்டேன்.
அந்த அக்கா, “வேற என்ன பண்ண தம்பி, அடுத்த மாசம் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன். அம்பானி அவரு வீட்டு கல்யாணத்துக்கு ரீச்சார்ஜ் பைசாவ உயர்த்தும் போது நம்ம உயர்த்தக் கூடாதான்னு” கேட்டாங்க…
“ஓ தாரளமா உயர்த்தாலாம்ன்னு” சொல்லிட்டு கிளம்பிட்டேன் .
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ச ப் பா ணி
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு.. குறிப்பாக, Standard Deduction உயர்த்தப்பட வேண்டும், பழைய முறையில் வரி செலுத்துவோருக்கு வரம்பை அதிகரிக்க வேண்டும், 80C உச்சவரம்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன #எல்லா பட்ஜெட்டிலும் இந்த வரிகள் மட்டும் மாறவே இல்லை
டி20 உலக கோப்பை வெற்றியை டிராவிட், ரோஹித், கோலி, ஜடேஜாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” -ஜெய்ஷா
மாமியார் கூந்தலைப் பிடிங்கி மருமகள் தானம் விட்ட கதை
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
பக்கத்துல ஒரு போட்டோ ஸ்டூடியோ திறப்பு விழா பிரேக்பாஸ்ட்க்கு சொந்த பந்தங்கள் குடும்பத்தோட கூட்டம் குமிஞ்சுருக்கு. வந்தவங்களை இப்ப வேணா போட்டோ எடுத்துக்கலாம், நாளைல இருந்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்க கூட இந்த பக்கம் ஒதுங்க மாட்டாங்க..
கடைநிலை ஊழியன்
சலூன் கடைக்கு போயிட்டு, லைட்டா கட் பண்ணுங்க, மீடியம்மா கட் பண்ணுங்க, பின்னாடி ரொம்ப குறைக்காதீங்க, அப்படி, இப்படி னு நீங்க என்ன சொன்னாலும், கடைசில நடப்பது என்னவோ, “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” மட்டும் தான் !!
“பாண்டியன் ஊறுகாயா”
அதான் இல்ல, மொபைல் போன்..
எல்லோரும் ஏரோப்ளேன், ஹெலிகாப்டர், வாங்கணும்னு நல்ல எண்ணத்துல, அதுக்கு ஜிஎஸ்டி குறைச்சி, 5% வைத்தால்… அதற்கு குறை சொல்றாங்க
ℳsd இதயவன்
5.20 க்கு லன்ச்
அப்ப டின்னர் ?
அதை ஏன்ங்க கேட்குறீங்க ஏப்பம் விடுற சவுண்ட்ம் கோழி கூவும் சவுண்ட்ம் ஒரே கோரஸா இருக்கும் னா பாத்துகோங்களேன்
குழந்தைகளுக்குப் பிடித்தவர்களாக இருக்க அவர்களின் பள்ளி, படிப்பு பற்றிய கேள்விகளைத் தவிர்ப்பதே போதுமானது…!!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஹுவா மொய்த்ரா மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!