மாசம் ஒரு வாட்ஸப் குரூப் – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

இன்னைக்கு காலையில எழுந்து வாட்ஸப்ப ஓபன் பண்ணி பார்த்தேன். ஆபீஸ் ஃப்ரெண்டு ஒருத்தன் Trip to Kodaikanalனு புதுசா ஒரு குரூப்ப ஓபன் பண்ணி என்னை சேர்த்து விட்ருந்தான்.

“டேய் போன மாசம் தானடா Trip to Wayanadனு ஒரு குரூப் ஓபன் பண்ண, அத டெலிட் பண்ணிட்டு இப்போம் புதுசா ஒரு குரூப் ஓபன் பண்ணிருக்கன்னு” பிரைவேட் மெசேஜ் பண்ணேன்.

“அது ஒன்னும் இல்ல மாப்ள… இன்னைக்கு ஆபீஸ் லீவு. போர் அடிச்சது. அதான் ஒரு குரூப் ஓபன் பண்ணேன்னு” சொன்னான்.

“உன் போதைக்கு நாங்க ஊறுகாவான்னு” அவனுக்கு மெசேஜ் போட்டுட்டு அந்த குரூப்ல இருந்து லெஃப்ட் ஆகிட்டேன்.

ச ப் பா ணி

படிக்கிற பிள்ளை எங்கிருந்தாலும் படிப்பான் என்பது கடைசி பென்ச் பசங்களுக்காக சொல்லப்பட்டதாய் இருக்கும்

Dr. M. A. N. Loganathan
தனியார் பஸ் டிரைவர்கள்தான் அந்தக் கால டிஜேக்கள்
கோழியின் கிறுக்கல்!!
போன தீபாவளிக்கு வாங்கின தீராத சரக்கை, காலி செய்துட்டு அடுத்த தீபாவளிக்கு புது சரக்கு வாங்க துணிக்கடைக்காரங்க கண்டுபிடிச்சது தான், ஆடித் தள்ளுபடி!!
ச ப் பா ணி
அண்ணன் நல்லவரு, தன்மையானவரு.. தம்பி தான் கெட்டவரு, எடக்கானவரு என்பதன் சினிமா வெர்சன் தான் ஒரு படத்தின் முதல் மற்றும் இரண்டு பாகம்
mohanram.ko
லஞ்சம் கொடுத்தா தான் வேலையை முடித்து தருவேன் என்பதன் இன்னொரு வெர்ஷன் தான், ஓட்டு போட்டா தான் சலுகை கிடைக்கும் என்பதும்….
Kirachand
தேர்தல் தோல்வியை வெற்றிப் படிக்கட்டுக்களாக நினைக்க வேண்டும்! – எடப்பாடி பழனிசாமி தொடர் தோல்வியால் வெற்றிப் படிக்கட்டுக்களே கண்ணுக்கு தெரியலயே தலைவரே!
ச ப் பா ணி
அதிகாலையில் கேட்கும் பாடல்களுக்கு ஆயுள் அதிகம்
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share