இது என்னடா புதுசா இருக்கு? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நம்ம வார் ரூம் நண்பர் ஒருத்தருக்கு இன்னைக்கு கால் பண்ணேன்…

“என்னப்பா கொஞ்ச நாளாவே சோஷியல் மீடியாவுல உன்ன ஆளை காணோம்னு” கேட்டேன்.

“ஒன்னும் இல்லைன்னே பெர்சனல் வேலையா ஊருக்கு வந்துருக்கேன். அதான் போஸ்ட் எதுவும் போட முடியலைன்னு” சொன்னாப்ல…

“சரி கட்சியில தான் இன்னும் இருக்கியான்னு” கேட்டேன்.

“ஆமான்னே, அதுல என்ன சந்தேகம்னு” கேட்டாப்ல..

“இல்லை… உங்க கட்சியில எப்போம் யாரை தூக்குராங்கன்னு தெர்ல. ஒருவேளை யாரையாவது தூக்குனா ஆடியோ, வீடியோ, நிறைய உண்மை கதை வெளிய வருதுன்னு” சொன்னேன்.

“அதான்னே எங்க கட்சி. எங்களை நாங்களே டேமேஜ் பண்ணிப்போம்ன்னு” சொன்னாப்ல…

“நல்ல கட்சி. வாழ்க வளமுடன்னு” மனதார நண்பரை வாழ்த்திட்டு போனை வச்சிட்டேன்.

ச ப் பா ணி

ஒவ்வொரு தூக்க கலக்க Sundayக்கு பின்னாலும் துக்க கலக்கமான Monday இருக்கும்

Sasikumar J

ஞாயிற்றுக்கிழமை மட்டும் கூட்டமா இருந்தா அது கறிக்கடை, மீன் கடை

எல்லா நாளுமே கூட்டமாக இருந்தால் அது டாஸ்மாக்…!

ச ப் பா ணி

வார்த்தைகள் பல்லை உடைப்பதில்லை. ஆனால் மூக்கை உடைத்துவிடுகின்றன

 

கடைநிலை ஊழியன்

காலைல எழுந்ததும்.. பல்லு விளக்குறவன் – கிட்ஸ் !!

ஃபோன நோண்டுறவன் – லெஜண்ட் !!

ஃபோன நோண்டிகிட்டே, பல்லு விளக்குறவன் – அல்ட்ரா லெஜண்ட் !!

ச ப் பா ணி

லோக்கல் கிரிக்கெட் விளையாட ஆசையா கூப்பிட்டு போனால் ஃபீல்டிங் செய்யத்தான்

கடைநிலை ஊழியன்

வாழ்க்கை ங்கிறது, தோசை மாதிரி தான்.. நாலு தோசை ஊத்துனா, ஒண்ணு பிஞ்சு தான் வரும். பரவாயில்லை னு சாப்பிட பழகிக்கணும்..

black cat 

என்னவாம் திடீர்னு இந்த பக்கம் மதிய சாப்படுல காரம் கொஞ்சம் அதிகமா ஆயிடுச்சு நீங்க தா இனிப்பா பேசுவீங்களே அதான் கொஞ்சநேரம் பேசிட்டு போலாம்னு வந்தேன்

ச ப் பா ணி

மனைவியர் மைண்ட் வாய்ஸ் இருவகை

*தான் சொல்வதை செய்ய வேண்டுமென்பது ஒரு வகை

*சொன்னாதான் செய்வியானு நினைப்பது மற்றொருவகை

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆரம்பமே அதிரடி… முதல் ரிவ்யூ மீட்டிங்கில் கடுகடுத்த டேவிட்சன் தேவாசீர்வாதம்

சென்னானூர் அகழாய்வில் கற்கால கருவி: ஸ்டாலின் பெருமிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share