மாப்ள இவரு தான் ஆனா… அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பன் ஒருத்தன் கூட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். மாஸ்டர் கிட்ட ஸ்ட்ராங்கா ரெண்டு டீ போட சொல்லிட்டு பேச்சுக்கொடுத்துட்டு இருந்தேன்

“என்னய்யா… கடைசியில பூனை குட்டி வெளிய வந்துருச்சு போலன்னு” சொன்னேன்.

ADVERTISEMENT

“சட்டமன்றத்துல இன்னைக்கு நடந்தத தான சொல்றீங்கன்னு” கேட்டாப்ள

“ஆமாமா… முன்னாடி என்னன்னா அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குல கைதான ஞானசேகரன் யாருன்னே எங்களுக்கு தெரியாதுன்னு சொன்னாங்க.

ADVERTISEMENT

இன்னைக்கு யூடர்ன் அடிச்சி மாப்ள இவரு தான் ஆனா அவரு போட்ருக்குற சட்டை என்னதுன்னு செந்தில் சொல்ற மாதிரி ஞானசேகரன் திமுக உறுப்பினர் கிடையாது, ஆனா ஆதரவாளர்னு முதல்வர் சொல்லியிருக்காரு” சொன்னேன்.

“நீ வேற போ நண்பா… திமுக அனுதாபி ஞானசேகரன் மேலயே இத்தனை கேஸ்னா… திமுக உறுப்பினர் மேல எத்தனை கேஸ் இருக்குமோன்னு” உச் கொட்டுனாப்ல.

ADVERTISEMENT

நாங்க பேசுறத பார்த்துக்கிட்டு இருந்த டீக்கடைக்காரன்னே, “தம்பி… இங்க வச்சி அரசியல்லாம் பேசக்கூடாதுன்னு” ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாப்ள…

அவருக்கு அவரு பிரச்சனை… டீயை குடிச்சிட்டு நாங்க கிளம்பிட்டோம்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…  

காளையன்..


பத்து குபேரன் சிலையும் பத்து
லட்சுமி படமும்
வச்சா..

பணக்காரன்
ஆகிடலாமா?

கடைக்காரன்
ஆகிடலாம்..

ச ப் பா ணி

குளிர் காய்வதை விட சுகமானது, குளிர்காலத்தில் வெயில் காய்வது.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

‘அவன் இவன்’ படத்தால பெரிய பாதிப்பு மாமா..

விஷாலுக்கு தானே மாப்ள..? பங்ஷன்ல பேசும் போது அவர் கை நடுங்கறதை நானும் கவனிச்சேன்

விஷாலா..? குடும்பத்தோட படம் பார்த்து 2000 ரூ செலவாகி தலைவலி வந்து டாக்டர் பீஸ் மருந்து மாத்திரைன்னு 500 ரூபாய் நஷ்டமாகி எனக்கு பாதிப்புன்னு சொன்னேன் மாமா..

நெல்லை அண்ணாச்சி

ஈரோடு இடைத்தேர்தல்
த.வெ.க. போட்டியில்லை

straight….முதலமைச்சர்…!!!

Sasikumar J

நம்மளோட ஆசைகள் ‘தோசை’ மாதிரி ரொம்ப பெருசா தான் இருக்கும் ஆனால் நமக்கு நிறைவேறுவது என்னவோ ‘மினிஇட்லி’ மாதிரி சின்னதா தான்…!

Black cat

மத்தவங்க மாறி Costly Headset வாங்கி , பிரம்மாண்டமா எவ்ளோ பாட்டு கேட்டாலும், Music Quality இல்லாம ஏமாத்துவாங்க….

நாங்க 50rs Headset லயும் எவ்ளோ எங்களால best ah பண்ணி தர முடியுமோ பண்ணி தறோம் வாங்க …

HBDHarrisJayaraj

ச ப் பா ணி

முள்ளில் பட்ட சேலை போல மெதுவாக எடுக்கிறேன் முதலில் சுடும் தோசையை

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share