இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? – அப்டேட் குமாரு

Published On:

| By Selvam

நண்பன் ஒருத்தன் கூட இன்னைக்கு டீ கடையில பேசிக்கிட்டு இருந்தேன்.

“பேசாம ஸ்கூல் படிக்கிற பையனாவே இருந்துருக்கலாம்டான்னு” சொன்னான்

“ஏன் டா… எக்ஸ் லவ்வர் யாரையாவது பார்த்தியான்னு” கேட்டேன்.

“இல்லடா… மனசாட்சியே இல்லாம பொங்கலுக்கு ஒன்பது நாளு லீவு விட்ருக்காங்கன்னு” சொன்னான்.

“நீ ஸ்கூல் படிக்கும் போது 10 நாள் லீவு போடுவ. ஆனா இப்ப கவர்மென்ட்டே லீவு விடுறாங்க. சரி… சரி… விடு பார்த்துக்கெல்லாம்ன்னு” ஆறுதல் சொல்லி அனுப்புனேன்.

இதுக்கெல்லாம் வருத்தப்பட்டா எப்படி கோபால்?

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி

சீறும் பாம்பை நம்பு
சிங்கிள் friend உள்ள முகநூல் அழைப்பை நம்பாதே

Hackers

Mannar & company™????

எல்லோருக்கும் நல்லநேரம் கெட்டநேரம், ராசிபலன் சொல்ற காலண்டரே ஆணில மாட்டிக்கிட்டு முழித்துக்கொண்டு இருக்கு!!

ச ப் பா ணி

பத்தாவது தடவையாய் விழுந்தவனை பார்த்து வினுசக்கரவர்த்தி வாய்சில் வாழ்க்கை சொன்னது “எனக்கே அப்பவே தெரியும்டா, நீ இதுக்குதான் லாய்க்குனு”

mohanram.ko

கோலி டூ கம்பீர் – ஹய்யா 3 நாள்ல டெஸ்ட் மேட்ச் முடிஞ்சிடும்…மீதி 2 நாள் ஜாலியா ஊர் சுத்தலாம்…

Mannar & company™????

பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வரலையேன்னு நீ வருத்தப்படுற..

அந்த ஒரு படம் வராததால பத்து படங்கள் ரிலீஸ் ஆகுதுன்னு நான் சந்தோசப்படுறேன்!

குற்றாலக் ???? குறிஞ்சி


திட்டங்கள் எல்லாம் கோடியில் தான் வருது

அதற்கு வரி கட்டும் மக்கள் நிலைமை தான் திண்டாட்டத்தில் முடியுது

Santhiya ????‍♀️

கொடுக்க போறது 1 கிலோ அரிசி..
ஒரு காஞ்சி போன துண்டு கரும்பு..
இதுக்கு பேரு பொங்கல் பரிசு தொகுப்பு.
அதுக்கு டோக்கன் ஒன்னுதான் கேடு..

கடைநிலை ஊழியன்

ஜோசியர் – 2025 உங்களுக்கு அமோகமா இருக்கும்..

இத தான போன வருசமும் சொன்னிங்க..

சங்கரிபாலா

மார்கழி மாதங்களில் கோவிலுக்குச் செல்வோரில் பலர் பிரசாதத்தின் ருசிக்கு அடி(மையான)யவர்கள் தான்..!!!

Mannar & company™????

காதலிக்கிறப்ப தேனா பேசுனதும்,
கல்யாணத்திற்கு பிறகு தானா பேசிகிட்டு இருக்குறதும் ஒரே ஆளா..?!

——————————-

சாருநிவேதிதா

‘எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம்போல இருக்கிறது!’
—-சாரு நிவேதிதா!

ஒரு கன்னட எழுத்தாளர் – நாற்பது வயது – பத்து புத்தகம் எழுதியிருக்கிறார் –

ஒரு புதினம் பதினைந்தாயிரம் பிரதிகள் ஒரு ஆண்டில் விற்கிறதாம். கன்னட மொழியில்தான் எழுதுகிறார்.

பெங்குவின், ஹார்ப்பர்காலின்ஸ் என்று அத்தனை பதிப்பகங்களும் அவருடைய நூல்களை மொழிபெயர்த்து வெளியிடுகின்றன.

ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பு மெக்ஸிகோவில் நடந்ததாம். வெளியீட்டு விழாவுக்கு மெக்ஸிகோ போய் வந்தாராம்.

நாற்பது வயது. பத்து புத்தகம்.

எனக்கு எழுபது வயது. நூறு புத்தகம். தொகுக்கப்படாமல் இன்னும் ஐம்பது புத்தகம் உள்ளன.

எனக்கு சென்னையை விட்டு வெளியே செல்ல சாத்தியமே இல்லாமல் இருக்கிறது.

கன்னடம் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. நான் பிறந்த சமூகம் சினிமாவைக் கொண்டாடுகிறது.

|| எனக்கு தூக்கு மாட்டிக்கொண்டு சாகலாம் போல் இருக்கிறது ||

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஆம்பளை பசங்களுக்கு பொறுப்பு வரனும்னா ஏன் தெரியுமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க..?

அப்பதான் வீட்டுக்கு போறதுக்கு பேசாம ஆபிஸ்லயே இருக்கறதே பெட்டர்னு தோணும், வாழ்க்கைல முன்னேற்றம் தானா வரும்..

லாக் ஆஃப்

2025-ன் முதல் சட்டமன்றம்… ஆளுநர் அண்ட் எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

அண்ணா பல்கலை… அன்று இரவு 7 To 10… நடந்தது என்ன? – இதுவரை வெளிவராத நடுங்க வைக்கும் தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share